Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தினந்தோறும் அருகம்புல் ஜூஸ் அருந்துவதால் இத்தனை நன்மைகளா...!!

Arugampul
, செவ்வாய், 31 மே 2022 (15:33 IST)
அருகம் புல்லினைச் சாறு எடுத்து பாலுடன் சேர்த்து இரவில் படுப்பதற்கு முன் சாப்பிட்டு வந்தால் நமது பலவீனமடைந்த தேகம் தேறி நல்ல பலம் பெற்று வருவதைக் காணலாம்.


நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரை சத்துக்கள் குறைவாக கொண்ட உணவுகளை உண்ண வேண்டும். இவர்கள் தினந்தோறும் அருகம்புல் ஜூஸ் அருந்துவது இவர்களின் உடல்நலத்திற்கு நல்லது.

அருகம் புல்லில் எலும்புகளின் உறுதிக்கு தேவையான மெக்னீசியம், கால்சியம் போன்ற சத்துகள் நிறைந்து இருக்கின்றன. அருகம் புல் ஜூஸ் தினந்தோறும் காலையில் சாப்பிட்டு வருபவர்களுக்கு எலும்புகள் உறுதியாக இருக்கும்.

அருகம்புல் ஜூஸ் அருந்த சிறுநீரகங்களில் கற்கள் உண்டாவதை தடுத்து சிறுநீரை பெருக்கும். வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் சிலருக்கு வயிற்றில் இருக்கும் ஜீரண அமிலங்களின் சமச்சீரற்ற தன்மையால் சாப்பிடும் உணவுகள் சரியாக செரிமானம் ஆகாமல் அஜீரணம், வாயுத்தொந்தரவுகள் ஏற்படும். இக்குறைபாட்டை போக்க ஒரு நாளைக்கு ஒருமுறை அருகம்புல் ஜூஸ் அருந்த வேண்டும்.

ரத்த போக்கு சில பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிகம் ரத்தபோக்கு ஏற்படும். அது போல சிலருக்கு என்ன காரணத்தினாலோ மூக்கிலிருந்து ரத்தம் வடியும். இப்படிப்பட்டவர்கள் அருகம்புல் ஜூஸ் அருந்துவதால் இக்குறைபாடுகள் நீங்கும்.

அருகம்புல்லினை எடுத்து வந்து அதனைச் சுத்தம் செய்து அம்மியில் வைத்து அரைத்து, அதன் ரசத்தினை தினமும் காலையில் பற்களைத் துலக்கிய உடன் 48 நாட்கள் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உஷ்ணம், பித்தம் தொடர்பான வியாதிகள் அறவே நீங்கிவிடும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முடி கொட்டுவதற்கான காரணங்களும் தீர்வுகளும் பற்றி பார்ப்போம் !!