Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாதம் வடித்த கஞ்சி தண்ணீரில் இத்தனை நன்மைகளா...!!

Webdunia
சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடிப்பதால் இரைப்பைக் குடல் அழற்சியைத் தடுக்கும். மேலும் உடலின் வெப்பநிலையை சீராக பராமரிக்க உதவும்.

புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கும் திறன் இந்த தண்ணீரில் இருப்பதால் புற்றுநோய் உள்ளவர்கள் இதனை குடித்து வந்தால், புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கலாம்.
 
சாதம் வடித்த கஞ்சியில் நிறைய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. அதில் லேசாக உப்பு போட்டு குடித்தால் மலச்சிக்கல் பிரச்சினைகள் முற்றிலும் தீரும். நாள் முழுவதும் புத்துணர்சி கிடைக்கும். உடலில் இருக்கும் உஷ்ணம் தணிந்து உடலை குளிர்ச்சி அடைய செய்யும் இதனால் உடல் சூட்டால் வரக்கூடிய எல்லா பிரச்சினைகளும் தீரும். 
 
உடலில் நீரின் அளவு குறையும் பொழுது நீர்கடுப்பு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் அடிவயிற்றில் அதீத வலியும், சிறுநீர் கழிப்பதில் எரிச்சலும் ஏற்படும். இப்படியான பிரச்சனைகளும், வெள்ளை படுதல் பிரச்சனை, கண் எரிச்சலும் தீர தினமும் இந்த கஞ்சியை குடித்து வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
 
சாதம் வடித்த கஞ்சியில் வெந்நீர், கல் உப்பு கலந்து மிதமான சூட்டில் கால்களை வைத்தால் கால் வீக்கத்தை குறைக்கும். சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடிப்பதால் நீண்ட நேரம் நல்ல எனர்ஜியுடன் வேலை பார்க்க முடியும்.
 
மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் ஒரு டம்ளர் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். உடல் எடையை அதிகரிக்க நினைப்போர் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை தினமும் குடித்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

`அல்சைமர்' எனும் மறதிநோய்.. இந்த நோயை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

வாய்வு வெளியேறும் போது சத்தம் வருவது ஏன்?

வெயில் காலத்திற்கேற்ற நன்னாரி சர்பத்.. சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா?

கேனில் அடைக்கப்பட்ட பானங்கள் குடித்தால் புற்றுநோய் வருமா? அதிர்ச்சி தகவல்

பாலூட்டும் தாய்மார்களுக்கு தேவையான முக்கிய ஊட்ட்சத்துக்கள் எவை எவை?

அடுத்த கட்டுரையில்
Show comments