Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அற்புத பலன் தரும் ஆளி விதைகளை உட்கொள்வதால் உண்டாகும் பயன்கள் !!

அற்புத பலன் தரும் ஆளி விதைகளை உட்கொள்வதால் உண்டாகும் பயன்கள் !!
தினமும் ஆளி விதை உட்கொண்டால் சருமத்துக்கும் நமது தலைமுடிக்கும் மினுமினுப்பைத் தரும். மேலும் கூந்தல் உதிர்வு தடுக்கப்படுகிறது.

ஆளி விதையை அப்படியே சாப்பிடலாம். அல்லது பொடியாக்கி உணவுகளின் மீது தூவி சாப்பிடலாம். ஆளி விதையில் உள்ள வைட்டமின் ஈ, சரும ஆரோக்கியம் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு அவசியமானதாகும்.
 
ஆளி விதையில் ஒமேகா 3, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது. ஆளி விதையில் 20 சதவீதம் புரதச் சத்து நிறைந்துள்ளது. இது உடல் எடையை எளிதில் குறைப்பதற்கு உதவுகிறது.
 
ஆளி விதையில் உள்ள ஆல்பா லினோலியிக் ஆஸிட் என்னும் கொழுப்பைத்தான் ‘ஒமேகா-3’ கொழுப்பு என்றும் கூறுவர். இது மிக முக்கிய கொழுப்புச்சத்து. ரத்தக் குழாய்களில் மற்ற கொழுப்புகள் படியாமலிருக்க செய்யும். அதனால் மாரடைப்பு வராமலிருக்க உதவும். ஆஸ்துமா, பார்க்கின்ஸன்ஸ் எனப்படும் சீக்கிரம் வயதான தோற்றமளிக்கும் வியாதிகளை தடுக்கும் சத்துக்களைக் கொண்டது.
 
ஆளி விதையில் உள்ள கரையும் தன்மை உள்ள நார்ச்சத்து, கரையும் தன்மை அற்ற நார்ச்சத்து இரண்டுமே பல வகைகளில் நமக்கு நன்மை செய்யும். மலச்சிக்கலைத் தடுக்கும். இதில் ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் மிகுந்துள்ளதால் புராஸ்டேட் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், மலக்குழாய் புற்றுநோய் போன்றவை வராமல் பாதுகாக்கும்.
 
தினமும் ஆளி விதை உட்கொண்டால் மூட்டுவலியைக் குறைக்கும். சருமத்துக்கும் நமது தலைமுடிக்கும் மினுமினுப்பைத் தரும். ஆளி விதை உட்கொள்வதன் மூலம் தோலின் ஈரத்தன்மை பாதுகாக்கப்படுவதால், தோல் வறட்சி, கூந்தல் உதிர்வு போன்றவை தடுக்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பக்கவாதம் ஏற்படுவதற்கான காரணங்களும் அறிகுறிகளும் என்ன...?