Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இத்தனை அற்புத சத்துக்களை கொண்டுள்ளதா முளைகட்டிய வெந்தயம்...!!

Webdunia
முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிடுவதால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கிறது. முதல் நாள் இரவில் ஒரு ஈரத் துணியில் வெந்தயத்தை போட்டு கட்டி வைத்திட வேண்டும். மறுநாள் காலை எடுத்துப் பார்த்தால் வெந்தயத்தில் முளைவிட்டிருக்கும். இவற்றை அப்படியே கூட  எடுத்துச்சாப்பிடலாம்.
உடல் எடை, தொப்பை அதிகம் இருப்பவர்கள் தினமும் இந்த முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் விரைவில் எடை குறைவதை  உணர்வீர்கள்.
 
வெந்தயம் இயற்கையாகவே குளிர்ச்சி தன்மை கொண்டது. இந்த முளைகட்டிய வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள  சூடு தணிந்து வயிற்று வலி, சூட்டினால் ஏற்படும் பருக்கள், முடி உதிர்வு போன்ற பிரச்சனைகள் தீரும்.
 
முளைகட்டிய வெந்தயம் சருமத்தில் உள்ள அனைத்து செல்களையும் தூண்டுவதால் அவை பாதிப்படையாமல் இருக்கின்றன. இதனால் பருக்கள்,  கருமை, முக சோர்வு, கரும்புள்ளிகள் அனைத்திற்கும் சிறந்த தீர்வாக அமைகிறது.
சர்க்கரை நோயாளிகள் தினமும் வெறும் வயிற்றில் முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் வெந்தயத்தில் உள்ள மூலக்கூறுகளால் உடலில் இன்ஸுலின் சுரப்பு அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.
 
முளைகட்டிய வெந்தயம் உடலில் கெட்ட கொழுப்புகளை சேரவிடாமல் ரத்தத்தின் செயல்பாட்டை சீராக வைக்கிறது. இதனால் இதயம்  சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எளிதில் நேராது.
 
முளைகட்டிய வெந்தயம் வைரஸ் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும். குறிப்பாக காய்ச்சல், தலைவலி போன்றவற்றை உடனடியாக குணப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments