Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வயிற்று தொப்பையை குறைக்க உதவும் எளிய வழிகள் !!

Webdunia
வியாழன், 10 பிப்ரவரி 2022 (16:27 IST)
எடையை குறைக்க குறிப்பாக வயிற்றை குறைக்க பெரும் பாடுப்படுகின்றனர். அதற்காக மருத்துவர்களை சந்தித்து மற்றும் விதவிதமான மருந்துகளை உட்கொண்டு பணத்தை செலவழிக்கின்றனர்.


தினமும் தவறாது உடற்பயிற்சி மேற்கொள்ளல் வேண்டும். தினமும் குறிப்பிட்ட நேரம் உடற்பயிற்சிகென்று ஒதுக்க வேண்டும். கடினமான உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாதவர்கள் குறைந்தது காலை மற்றும் மாலை வேளைகளில் நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.

பொதுவாக கடைகளில் கிடைக்கும் சர்க்கரையை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் கடைகளில் கிடைக்கும் சர்க்கரையானது சுத்திகரிப்பு என்ற பெயரில் செயற்கை ரசாயனங்களை அதிகம் உபயோகிக்கின்றனர். இதை தவிர்ப்பது நல்லது. சர்க்கரைக்கு பதில் இயற்கை முறையில் கிடைக்கும் தேன், பனங்கற்கண்டு மற்றும் அதிமதுர சாறு ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

உடலில் உள்ள கொழுப்புகளை சக்தியாக மாற்றும் கார்னிடைன் என்ற பொருளை சுரப்பதற்கு உதவும் வைட்டமின் சி மிகவும் அவசியமானதாக உள்ளது. எனவே வைட்டமின் சி நிறைந்த உணவுகளை எடுத்து கொள்வது மிகவும் நல்லது.

பூண்டு, வெங்காயம், இஞ்சி, சிவப்பு மிளகு, கோஸ், தக்காளி, மற்றும் இலவங்கப்பட்டை, கடுகு, கிராம்பு ஆகியவை கொழுப்பை கரைக்க உதவுகின்றன. சிறிது கிராம்பு, பச்சை பூண்டு மற்றும் ஒரு அங்குல அளவிற்கு இஞ்சி ஆகியவற்றை கலந்து தினமும் காலை சாப்பிட்டு வந்தால் கொழுப்பை நிச்சயம் கரைக்க முடியும். வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் எலுமிச்சை சாறு மற்றும் தேனை கலந்து,

உடல் எடையை மேம்படுத்த தூக்கம் மிகவும் அவசியமாகும். மனிதனுக்கு 6 முதல் 8 மணி நேர உறக்கம் அவசியம் தேவை. காலை உணவை தவிர்ப்பது உடல் எடையை குறைக்க உதவும் என்று நிறைய மக்கள் தவறாக நினைப்பதுண்டு. இது உடல் எடையை குறைக்காமல், உடல் வீக்கமடைய காரணமாகிவிடுகிறது. இதனால் வயிறு உப்புசமடைவது அதிகரித்து, பசி அதிகமாவதால் வயிற்றுக் கொழுப்பு மிகவும் அதிகமாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments