குழந்தைகள் பெரியவர்களுக்கு வயிற்றில் பூச்சி தொல்லை அதிகமாக இருக்கும். அவர்கள் கல்யாண முருங்கை இலைகளின் சாற்றை உட்கொள்வதால் வயிற்றிலுள்ள பூச்சிகள் முட்டைகள் அனைத்தும் அழிந்துவிடும்.
வயிற்றிலுள்ள பூச்சிகள் நீங்க, கல்யாண முருங்கை இலைச்சாறு எடுத்து தேக்கரண்டியளவு தேன் கலந்து சாப்பிட்டால், பூச்சிகள் தொல்லை நீங்கும். கல்யாண முருங்கை இலையை சாறு எடுத்து மோரில் கலந்து சாப்பிட்டால், சிறுநீர் எரிச்சல் நீங்கும்.
மனிதர்களுக்கு ஏற்படும் புண்கள், தோல் நோய்கள் குணமாக, இதன் பட்டையை நசுக்கி வெந்நீரில் கொதிக்க வைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வர அனைத்தும் குணமாகும்.
கல்யாண முருங்கை இலைச்சாற்றை அருந்தி வந்தால் உடல் எடை குறையும். கல்யாண முருங்கை மரத்தின் பட்டைகள் பாம்புக்கடிக்கு நல்ல மருந்தாக செயல்படுகிறது.
வெள்ளைப்படுதலை குணமாக்கிட கல்யாண முருங்கை இலைகளை நன்றாக கழுவி அரைத்து தோசை மாவில் கலந்து சிறிது உப்பு சேர்த்து தாளித்து தோசை போன்று செய்து சாப்பிடலாம். மாதம் ஒருமுறை சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பை பலமாக வெள்ளைப்படுதல் சரியாகும்.
கர்ப்பப்பை அழுக்குகளை வெளியேற்ற கல்யாண முருங்கை இலையுடன் மிளகு, பூண்டு சேர்த்து கொஞ்சமாக மஞ்சள் சேர்த்து கொதிக்கவைத்து, நன்றாக கொதித்த பின்னர் வடிகட்டி முப்பது நாட்கள் தினமும் குடித்துவர கர்ப்பப்பையில் இருக்கும் அழுக்குகள் வெளியேறும்.