Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அல்சர் பிரச்சனையிலிருந்து நிவாரணம் பெற உதவும் எளிய குறிப்புகள் !!

அல்சர் பிரச்சனையிலிருந்து நிவாரணம் பெற உதவும் எளிய குறிப்புகள் !!
தினமும் ஆப்பிள் ஜூஸ், அகத்திக் கீரை சாறு, பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தாலும் அல்சர் பிரச்சனையிலிருந்து விடுபடலாம். நெல்லிக்காய் ஜூஸில் தயிர் சேர்த்து குடித்து வந்தாலும் நிவாரணம் கிடைக்கும்.

* தினமும் காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் தேனை ஊற்றி குடித்தாலும் அல்சரால் ஏற்படும் வயிற்று எரிச்சல் பிரச்சனை சரியாகும்.
 
* பாக்டீரியா எதிர்ப்பு பொருள் நிறைந்துள்ள வெள்ளைப்பூண்டை தேன் கலந்து சாப்பிட்டாலும் அல்சர் சரியாகும். காலையில் பால் மற்றும் வெண்ணெய் சாப்பிட்டால்  வலி குறைய வாய்ப்புண்டு.
 
* வெந்தயம் கலந்த டீ, கற்றாழை ஜூஸ் இதற்கு ஒரு நல்ல தீர்வாகும், குறிப்பாக அதிகளவு தண்ணீர் பருகுவதே சிறந்த தீர்வாக கருதப்படுகிறது. தினமும் நெல்லிக்காயை சாப்பிட்டு வர அல்லது ஜூஸ் செய்து அதனுடன் தயிர் கலந்து அருந்தி வர அல்சர் பிரச்சனையை சரி செய்திட இயலும்.
 
* தினமும் சாதத்தில் தேங்காய் பால் ஊற்றி சாப்பிட்டு வர வயிற்றுப் புண் சரியாகும். முட்டைகோஸ், பாகற்காய் மற்றும் முருங்கைகாயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தாலும் அல்சர் சரியாகும்.
 
* தினமும் ஒரு கப் அகத்திக்கீரையை சாப்பிட்டு வர அல்சர் பிரச்சனையை சரி செய்து விட முடியும். அகத்திக்கீரையை சூப் செய்து கூட குடிக்கலாம். தினமும்  புழுங்கல் அரிசி கஞ்சி ஒரு டம்ளர் அருந்தி வர, அல்சர் பிரச்சனையை சரி செய்து விட முடியும்.
 
* அல்சர் குணமாக வைத்தியம், துளசி இலை சாறுடன் சிறிதளவு மாசிக்காயை சேர்த்து வாரத்தில் இரண்டு முறை அருந்தி வர, குடல் புண், வாய் புண் போன்றவை  சரியாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தினம் ஒரு இஞ்சி துண்டை இந்த முறையில் சாப்பிடுவதால் இத்தனை பலன்களா...?