பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் பொடுகுக்கு மிகவும் நல்லது. வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும்.
அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து நன்கு காய்ச்சி ஆறவைத்து, தினசரி இதனை தலையில் தேய்த்து வந்தால், பொடுகு மறையும். வேப்பிலைசாறும் துளசி சாறும் கலந்து தலையில் தேய்கலாம்.
வசம்பு பவுடரை தேங்காய் எண்ணெய்யில் ஊறவைத்து தேய்கலாம். தலைக்கு குளித்தபின்பு தலையை துவட்டாமல் கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து தலைக்கு குளித்து அதன்பின்பு துவட்டி கொள்ளலாம்.
மருதாணி இலையை அரைக்கனும். அதனுடன் கொஞ்சம் தயிர், எழுமிச்சை சாறு கொஞ்சம் சேர்கனும். இந்த கலவையை தலையில் தேய்க்கவேண்டும். வேப்பிலை கொஞ்சமும் அதனுடன் கொஞ்சம் மிளகையும் சேர்த்து நன்கு அரைத்து தலையில் தேய்த்து 1 மணி நேரம் ஊறவைத்து பின்பு குளிக்கவேண்டும்.
தேங்காய் எண்ணெய்யுடன் வேப்பஎண்ணெய்யும் சேர்த்து காய்ச்சி தேய்த்து வந்தால் பொடுகு நீங்கும். நெல்லிமுள்ளி, வெந்தயம், சிறிது மிளகு இவற்றை ஊறவைத்து மைபோல அரைத்து தலையில் தடவி ஒரு மணிநேரம் ஊறிய பிறகு, நன்கு அலசினால் பொடுகு தொல்லை மறையும்.
வேப்பம்பூவை அதை 100 கிராம் தேங்காய் எண்ணெய்யில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெய்யை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்சனை தீரும்.