Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எலும்பு தேய்மானம் ஏற்படாமல் பாதுகாக்கும் எள்ளு !!

Webdunia
புதன், 15 டிசம்பர் 2021 (18:54 IST)
வாய்ப்புண் உள்ளவர்கள்  பலம் குறைவா இருக்கறவங்க எல்லாம் எள்ளையும் வெல்லத்தையும் சேர்த்து இடித்து வாயில் கொஞ்சநேரம் வைத்திருந்து துப்பினாலே போதும் இந்த பிரச்சனையெல்லாம் தீரும். 


சர்க்கரை நோய் உள்ளவர்கள் எள்ளு கலந்த உணவை சாப்பிட்டால் சர்க்கரை குறைக்கும்.
 
கால்சியம் குறைவால் வயதானவர்களுக்கு மூட்டு வலி வராமல் தடுக்கும். எலும்பு அடர்த்தி அதிகமாகி எலும்பு தேய்மானம் ஏற்படாமல் பாதுகாக்கும்.
 
எள்ளை  வறுத்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவுக்கு நெய்யில் கலந்து தினமும் மூன்று வேளை ஆறு நாள் சாப்பிட்டு வந்தாலே போதும் வயிற்றுப்போக்கு எல்லாம் குணமாகிவிடும். புதிதாக வயசுக்கு வந்த சில பெண்களுக்கு முறையான உதிரப்போக்கு அடிவயிற்றில் வலி இது மாதிரியான பிரச்சனைகள் இருந்தால், எள்ளை பொடி செய்து அதை நல்ல தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்து வந்தாலே போதும் மாதவிலக்கு சீராகும்.
 
பெண்களுக்கு உண்டாகும் இரத்த சோகையும் சரியாயிடும். ஆனால் மாதவிலக்கு காலங்களில் ஒரு கப் பாலில் உள்ள கால்சியம் சத்து ஒரு கையளவு  எள்ளுல் இருக்கிறது பால் சாப்பிட முடியாதவர்கள் எள்ளு மிட்டாய் சாப்பிட்டாலே தேவையான கால்சியம் நமக்கு கிடைக்கிறது.
 
ஆஸ்துமா நுரையீரல் சம்பந்தமான பிரச்சினைகள் எல்லாம் வராமல் இது தடுக்கும். பெண்கள் இதை சாப்பிட்டால் கர்ப்பப்பை பாதுகாக்கும். கல்லீரலுக்கு இது பாதுகாப்பு கொடுக்கும் உடம்பில் இருக்கிற கெட்ட கொழுப்பை  குறைக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எவ்வளவு செல்சியஸ் வெயில் இருந்தால் என்ன அலெர்ட்? – பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

பெண்கள் மேம்பாட்டுக்கான "அன்பு" என்ற புதிய சேவை! சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!

கோடை வெயிலில் தாக்கும் ஹீட் ஸ்ட்ரோக்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments