ஆஸ்துமா தொடர்புடைய பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சீந்தில் கொடி !!

Webdunia
ஆயிர்வேதத்தில் நாள்பட்ட இருமல், ஆஸ்துமா மற்றும் ஆஸ்துமா தொடர்புடைய அறிகுறிகளை நிவர்த்தி செய்வதற்கு சீந்தில் கொடி பயன்படுத்தப்படுகிறது.

சீந்தில் கொடி மூலிகையை ஒவ்வாமை எதிர்ப்புக்கு பயன்படுத்தலாம். ஆயிர்வேதத்தில் அம்ருதவல்லியை அஜீரணம் மற்றும் வயிறு வீக்கத்திற்கு மருந்தாக  பயன்படுத்துகின்றனர்.
 
இதை ஆயுர்வேத நூல்களில் அம்ரிதா, சின்னரூஹா, மதுபானி, தந்திரிகா, குண்டலினி என்கிற பெயரால் குறிப்பிடுகிறார்கள். இலை, தண்டு, வேர் அனைத்தும் மருந்தாகிப் பயன்தரக்கூடிய குணம் கொண்டது சீந்தில். செரிமானமின்மை, வலி, சோர்வு ஆகியவற்றை குணமாக்கும் தன்மையுடையது. 
 
வயிற்றுப்போக்கை வற்றச் செய்வது. சீத பேதியைக் குணப்படுத்தக்கூடியது. ஆயுர்வேத மருத்துவ நூல்கள் உலர்ந்த சீந்திலை மஞ்சள் காமாலையை குணமாக்கவும்,  ரத்த சோகையைப் போக்கவும், அடிக்கடி சிறுநீர் கழிப்பதைத் தவிர்க்கவும், சரும நோய்களை குணமாக்கவும் பரிந்துரை செய்கிறது.
 
சீந்தில் பொடியை நான்கு டம்ளர் நீர் விட்டு காய்ச்சி, பாதி அளவாக சுண்டிய பிறகு காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பசியின்மை, வயிற்றுவலி,  செரிமானமின்மை மற்றும் காய்ச்சலுக்கும் இது நல்ல மருந்து.
 
சீந்தில் சர்க்கரையை ஒரு கிராம் முதல் நான்கு கிராம் வரையில் வாயிலிட்டு நீர் அருந்துவதால் கடும் ஜுரத்துக்கு பின் ஏற்படும் உடல் இளைப்பு, மண்ணீரல் வீக்கம், இருமல், மூர்ச்சை, வாந்தி, ஆஸ்துமா ஆகியன குணமாகும். மேலும் இதனால் நாட்பட்ட சிறுநீர்ப்பை நோய்களுக்கும் தீர்வு கிடைக்கும்.
 
சீந்தில் இலையை அனலில் இட்டு வாட்டி, இளஞ்சூட்டோடு புண்களின் மேல் போட்டுவர வீக்கம் கரைந்து வலி குறையும். புண்களும் ஆறிவிடும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முடி கொட்டாமால் இருக்க என்ன செய்யவேண்டும்?.. வாங்க பார்ப்போம்!...

மூட்டு வலியை போக்க சிறந்த உணவுகள்!. முயற்சி பண்ணி பாருங்க!..

இரவு நேரத்தில் இளநீர் குடிப்பது நல்லதா?!.. வாங்க பார்ப்போம்...

14 - 16 சதவீதம் பேர் மது அருந்துகிறார்கள்!.. இதனால் வரும் நோய்கள் என்னென்ன?!...

40 வயதுக்கு மேல் சோர்வு வர இதுதான் காரணம்!.. ஆய்வில் முக்கிய தகவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments