Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்த புதினா !!

ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்த புதினா !!
ஏராளமான மருத்துவக் குணங்கள் நிறைந்த ஒரு மூலிகை கீரை வகையாக புதினா இருக்கிறது. புதினாவானது உடலினைக் குளிர்ச்சியாக வைப்பதில் முக்கிய பங்கு  வகிக்கின்றது.


மேலும் அல்சர் என்னும் குடல் புண், வயிற்றுப் புண், தொண்டைப் புண், வயிற்று எரிச்சல் போன்றவற்றிற்கு புதினாவை நிச்சயம் எடுத்தல் வேண்டும்.
 
புதினாக் கீரையினை ஜீஸாகவோ அல்லது சூப்பாகவோ எடுத்துக் கொண்டால் ஒபேசிட்டி பிரச்சினை உள்ளவர்களின் உடல் எடையானது விறுவிறுவென குறையும். மேலும் குழந்தைகள் சந்திக்கும் பிரச்சினைகளான வயிற்றுப் புழுக்கள், வயிற்றுப் பொருமல், ஒவ்வாமை, வாய்வுத் தொல்லை போன்றவற்றிற்கு  பரிந்துரைக்கப்படுகின்றது.
 
மூச்சுத்திணறல், ஆஸ்துமா, சளித் தொல்லை போன்றவற்றிற்கு மிகச் சிறந்த தீர்வாகவும் உள்ளது. மேலும் முதியவர்கள் அசைவ உணவுகளை உண்ட பின்னர் புதினா இலைகளை பத்தினை மென்று தின்றால், செரிமான மண்டலம் சீராகச் செயல்படும்.
 
சிறிது புதினா இலைகளை வாயில் போட்டு நன்கு மென்று தின்பதால் வாய் துர்நாற்றம் நீங்குகிறது. உணவிலிருந்து பற்கள் மற்றும் ஈறுகளில் இடுக்கில் தங்கிவிடும் கிருமிகளை புதினா இலை சாற்றில் இருக்கும் வேதிப்பொருட்கள் முற்றிலும் அழித்து பற்கள் மற்றும் ஈறுகளின் நலனை காக்கிறது.
 
தினமும் புதினா இலைகளை சாப்பிட்டு வருபவர்களுக்கு ரத்தம் மற்றும் இன்ன பிற உறுப்புகளில் தேங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வியர்வை, சிறுநீர் வழியாக வெளியேறி, உடலுக்கு புத்துணர்ச்சி தந்து எதிர்காலங்களில் கடும் நோய்கள் பாதிக்காமல் காக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுவை மிகுந்த கோவைக்காய் வறுவல் செய்ய !!