Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 16 April 2025
webdunia

சரும அழகை பராமரிக்க உப்பு; எப்பிடின்னு தெரியுனுமா..?

Advertiesment
உப்பு
வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்து வந்தாலே சரும அழகை மேம்படுத்தலாம்.  முக்கியமாக உப்பு சரும அழகை மட்டுமின்றி, தலைமுடி, நகம், பற்கள் போன்றவற்றின் அழகையும் மேம்படுத்த உதவும். இங்கு  ஒருவரது அழகை அதிகரிக்க உப்பை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என தெரிந்துகொள்வோம்.

 
உப்பு சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி, சரும பொலிவை அதிகரித்துக் காட்டும். அதற்கு 1/2 கப் ஆலிவ் ஆயில்,  1/4 கப் உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, குளிக்கும் முன், முகம், கை, கால் மற்றும் உடலில் தடவி மென்மையாக சிறிது  நேரம் ஸ்கரப் செய்து, பின் கழுவ வேண்டும்.
 
ஃபேஸ் மாஸ்க் உப்பு சருமத்தில் எண்ணெய் உற்பத்தியை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும். அதற்கு 2 டீஸ்பூன் கல்  உப்புடன், 4 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவவும்.
 
உப்பு ஸ்கால்ப்பில் உள்ள பொடுகை அசிங்கமாக வெளிவரும் செதில்களை நீக்கி, ஸ்கால்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள  உதவும். அதற்கு 2 டீஸ்பூன் உப்பை ஸ்கால்ப்பில் படும்படி ஈரமான விரல்களால் மென்மையாக 10-15 நிமிடம் மசாஜ் செய்ய  வேண்டும். பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.
 
அசிங்கமான நகம் உப்பு நகங்களை வலிமையாகவும், க்யூட்டிக்கிளை மென்மையாகவும் வைத்துக் கொள்ள உதவும். அதற்கு 1/2  கப் வெதுவெதுப்பான நீரில், 1 டீஸ்பூன் உப்பு, 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து,  அந்நீரில் விரல் நகங்களை 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.
 
மஞ்சள் பற்கள் உப்பு ஒரு நல்ல அழுக்கு மற்றும் கறை நீக்கியும் கூட. அத்தகைய உப்பை 1 டீஸ்பூன் எடுத்துக் கொண்டு,  அத்துடன் 2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர் சேர்த்து கலந்து, ஈரமான டூத் பிரஷ் பயன்படுத்தி பற்களைத் துலக்க வேண்டும். இதனால்  பற்களில் உள்ள மஞ்சள் பற்கள் விரைவில் நீங்கும்.
 
நேச்சுரல் மௌத் வாஷ் வாய் துர்நாற்ற பிரச்சனை இருந்தால், அதை உப்பு கொண்டு எளிதில் போக்கலாம். அதற்கு 1/4 கப் நீரில்  1/2 டீஸ்பூன் உப்பு மற்றும் 1/2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு கலந்து, அந்நீரால் கழுவ வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாழைப்பூ கட்லெட் செய்ய தெரிந்து கொள்ள வேண்டுமா...?