Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவும் இந்துப்பு !!

Webdunia
ஆயுர்வேதத்தில் பல மூலிகை மருந்து தயார் செய்வதில் இந்த இந்து உப்பு சேர்க்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த மருந்தின் வீரியம் வேகமாக உடலுக்கு சென்று  வேலை செய்ய தொடங்குகிறது என்று கூறபடுகிறது.
 


இந்துப்பில் கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், சல்பர் மற்றும் புளோரைடு,  அயோடின் போன்ற தாதுக்களுடன் சோடியம் குளோரைடு அதிக அளவில் உள்ளது. இது மங்கலான பழுப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது.
 
இமய மலைப் பகுதிகளின் அருகில் இருந்து எடுத்திருந்ததால்,  இமாலய உப்பு என்றும், இந்திய உப்பு என்றும் அழைக்கப்பட்டு, பின்னர் அது மருவி இந்துப்பு  என்றானது. தற்போது ‘ராக் சால்ட்’ என்றும் அழைக்கப்படுகிறது.
 
இந்துப்பு கலந்த இளஞ்சூடான வெந்நீரைக் கொண்டு வாய் கொப்புளித்துவர, வாய் துர்நாற்றம் நீங்கும், பல் வலிகள், ஈறு வீக்கம் போன்ற வாய் சம்பந்தமான  வியாதிகள் தீரும்.
 
குளிக்கும் நீரில் உப்பை போட்டு குளிக்க உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தை உருவாக்குகிறது. இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது. குளிர்ச்சியூட்டும் தன்மை உள்ள இந்த உப்பு, பசியைத் தூண்டும், மலத்தை இளக்கும்.
 
ரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. மேலும், குடல்கள் உணவை நன்றாக உறிஞ்சி உட்கிரகிக்கவும் உதவுவதோடு, நிம்மதியான  உறக்கத்தைத் தருவதுடன் தைராய்டு பிரச்சனைக்கும் தீர்வாக இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் அதிகம் பயன்படுத்தினால் முகப்பரு வருமா? அதிர்ச்சி தகவல்..!

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

அடுத்த கட்டுரையில்
Show comments