Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அனைத்து பாகங்களும் மருத்துவ குணமுடைய குப்பைமேனி இலை !!

அனைத்து பாகங்களும் மருத்துவ குணமுடைய குப்பைமேனி இலை !!
குப்பைமேனி இலை பொதுவாக எல்லா இடங்களிலும் காணப்படும் ஒரு கீரையாகும். இந்த செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணமுடையது.

மார்புச்சளி, கீல்வாதத்தை போக்கும். நெஞ்சுக்கோழையை நீக்கும். இருமலை கட்டுப்படுத்தும். குப்பைமேனி இலையை அரைத்து அதில் மஞ்சள் பொடி சேர்த்து  காயமடைந்த இடங்களில் தடவினால் காயம் விரைவில் குணமாகும்.
 
குப்பைமேனி பூச்சிகளினால் ஏற்படும் விஷக்கடி, ரத்தமூலம், வாதநோய், ஆஸ்துமா, குடற்புழுக்கள், மூட்டுவலி மற்றும் தலைவலி போன்ற நோய்களை  குணப்படுத்தும்.
 
வயற்றில் இருக்கும் குடற்பூச்சிகளை நீக்கும் தன்மை உடையது. தோல் நோய் நீக்கும். குப்பைமேனி இலையைப் நீரில் கொதிக்கவைத்து, கஷாயமாகச் செய்து,  அதனுடன் உப்பு சேர்த்துக் குடித்துவந்தால், மலம் இளகும்.
 
குழந்தைகளுக்கு இந்த கீரையை கொடுத்து வந்தால் வயிற்றில் இருக்கும் நாடாப்புழு, கீரிப்பூச்சி ஆகியவை நீங்கும். வெறிநாய் கடியும், சித்த பிரமையும்  குணமடையும்.
 
உடல் வலிக்கு குப்பைமேனி இலையை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி உடலில் தேய்த்து வந்தால் உடல் வலி நீங்கும். குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், பருக்கள் மறைந்து முகம் பளபளப்பாகும்.
 
நோய்வாய்ப்பட்டு நீண்ட நாட்களாகப் படுக்கையில் இருந்தவர்களுக்கு படுக்கை புண் வரும். அப்படி படுக்கை புண் வந்தவர்களுக்கு, குப்பைமேனி இலையை  உலர்த்தி பொடி செய்து புண் இருக்கும் இடத்தில் கட்டுப்போட, புண்கள் ஆறும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்ற முடக்கத்தான் துவையல் செய்ய !!