Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவ குணங்கள் நிறைந்த மருதம் பட்டை...!

Webdunia
மருதம் பட்டையை ஒன்றிரணடாக இடித்து அதை நீரில் இட்டு நன்கு காய்ச்சி வடிகட்டி அந்த நீரைக் கொண்டு புண்களை கழிவிவர புண்கள்  விரைவில் ஆறும்.

மருதம் பட்டையை பொடித்து பல் துலக்கி வர பல் வலி, பல் ஈறு வீக்கம் ஆகியவை குணமாகும்.
 
மருத மரத்தின் இலையை அரைத்து பாலில் கலந்து காலை மாலை ஆகிய இருவேளை 3 நாட்கள் குடித்துவர பித்தவெடிப்பு குணமாகும்.
 
மருதம் பழுத்தை நீராவியில் அவித்து பிசைந்து புண்களின் மீது வைத்து கட்டிவர கொடிய புண்களும் ஆறிவிடும்.
மருதம் பட்டையை பொடித்து அதில் 2 கிராம் அளவு வெந்நீரில் கலந்து உட்கொண்டுவர வாத நோய்கள், மூட்டுவலி ஆகியவை குணமாகும்.
 
மருதம் பட்டையை சிறு சிறு துண்டுகளாக்கி 4 பங்கு நீரில் அதை கலந்து ஒரு பங்காக வற்றியதும் வடிகட்டி குடித்துவர இரைப்பு, இருமல், காய்ச்சல், கழிச்சல் ஆகியவை குணமாகும்.
 
மருதம் பட்டை, அரசம் பட்டை, வில்வப் பட்டை ஆகியவற்றை தலா 35 கிராம் எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றுடன் ஜாதிக்காய், சாதிபத்ரி, இலவங்கபட்டை ஆகியவற்றை 20 கிராம் எடுத்து, இவை அனைத்தையும் நீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி குடித்துவர கழிச்சல் தீரும். இதயம்  வலுப்பெறும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாய் துர்நாற்றத்திற்கான காரணங்கள் என்ன? போக்க எளிய வழிகள்!

அளவுக்கு அதிகமாக குடித்தால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள்..!

தொண்டை வலிக்கு சில எளிய வீட்டு வைத்தியங்கள்!

சர்வதேச மீள் உருவாக்க மருத்துவம்! ரீஜென் 2025 மாநாடு! - பிளாஸ்மா சிகிச்சைக்கு வழிகாட்டுதல்கள்!

தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்ய வேண்டியது என்ன? செய்ய கூடாதது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments