கழுத்தில் ஏற்படும் கருமையை நீக்க எளிய அழகு கு்றிப்புகள்...!

Webdunia
தேன் மற்றும் எலுமிச்சை கலந்த கலவை இயற்கையாகவே அமைந்த தோல் மாஸ்டரைசர். மேலும் சர்க்கரை ஒரு நல்ல ஸ்கிரப்பர். எனவே இவற்றை ஒன்றாய் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கலவை முட்டிகளில் உள்ள கருமையை உடனடியாக போக்க உதவும்.
தினமும் இரவில் படுக்கும் முன் கற்றாழை ஜெல்லை கழுத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் கழுவலாம். இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல மாற்றத்தை நீங்களே காண்பீர்கள்.
 
ஆலிவ் எண்ணெயையும் பயன்படுத்தலாம். சூரியனிடம் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களால் தோல் கருமை அடைவதைத் தடுக்கும்.
 
ஆலிவ் ஆயில், லெமன் ஜூஸை சம அளவு எடுத்து, கழுத்தை சுற்றி தடவி, 20 நிமிடம் கழித்து, எண்ணெய் இல்லாமல் சுத்தமாக கழுவுவதால்  கருமை நீங்கி பளிச்சிடும்.
 
கற்றாழையைத் தோல் சீவி, அதனுள் இருக்கும் ஜெல்லை அப்படியே மூட்டுப் பகுதியில் பூசி, 10 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். அரை  மணி நேரத்துக்குப் பிறகு தண்ணீரில் கழுவ வேண்டும்.
 
பாதி எலுமிச்சைப் பழத்தில் சிறிதளவு தேன் விட்டு, மூட்டுப் பகுதியில் ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்தால், விரைவில் கருமை மறையும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகள் என்ன? தடுப்பு முறைகள் குறித்த விளக்கம்..!

தினம் ஒரு கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? பயனுள்ள தகவல்..!

நீரிழிவு அதிகரிப்புக்குக் காரணம் என்ன? வெள்ளை உணவுகள் பற்றி ஆயுர்வேத மருத்துவர் விளக்கம்!

பிறப்புறுப்பில் அரிப்புக்கான முக்கிய காரணங்கள்: இந்த தவறை எல்லாம் செய்யாதீர்கள்..!

ஏடிஎம் ரசீது ஆண்களின் விந்தணுவை பாதிக்குமா? அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments