பெண்களுக்கு மாதந்தோறும் சரியான நாட்கள் இடைவேளையில் மாதவிடாய் ஏற்படுவது அவர்களின் உடலாரோக்கியமாக்க இருப்பதற்கு நல்ல அறிகுறியாகும்.
மாதவிடாய் பிரச்சனைகள் ஏற்படும் பெண்கள் கழற்சிக்காய் விதைகளை கொண்டு செய்யப்பட்ட சூரணத்தை சாப்பிட்டு வந்தால் முறையற்ற மாதவிடாய் நீங்கும்.
கருப்பையையும் வலுப்படுத்தும். வாதம் உடலின் காற்று எனப்படும் வாதம் அதிகரிக்கும் போது பக்கவாதம், கை, கால்கள் மற்றும் இடுப்பு மூட்டுகளில் விறைப்புதன்மை மற்றும் வலி ஏற்படுகிறது.
கழற்சிக்காய் விதைகளை கொண்டு செய்யப்பட்ட சூரணத்தை சாப்பிட்டு வந்தால் வாதம் கட்டுப்படும். இதன் இலைகளை நன்கு அரைத்து மூட்டு பகுதிகளில் தடவி வந்தால் விறைப்பு தன்மை மற்றும் வலி நீங்கும்.
கழற்சிக்காயின் இலைகள் மற்றும் விதைகளை அரைத்து செய்யப்பட்ட தூளை சிறிதளவு நீரில் கலந்து பருகி வர வயிற்று கோளாறுகள் நீங்கும். ஈரல் நமது உடலுக்கு நோய்களை எதிர்த்து நிற்கும் நோய் எதிர்ப்பு திறன் மற்றும் நாம் உண்ணும் உணவுகளில் இருக்கும் நச்சுத்தன்மையை அழிப்பது போன்ற செயல்களை நமது ஈரல் செய்து வருகிறது.
கழற்சி கொடியின் காம்புகளை பக்குவம் செய்து சாப்பிடும் போது நமது ஈரல் பலம் பெறும். அதன் செயல்பாடுகளும் மேம்பாட்டு உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.