Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரத்த அழுத்தத்தை குறைக்க அற்புத வழிகள்.....!!

Webdunia
உடற்பயிற்சி செய்வது இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் என்று தேசிய சுகாதார நிறுவனம் கூறுகிறது. பொதுவாகவே உடற்பயிற்சி செய்யும்  போது இதயம் வலிமையாகவும் உடலில் உள்ள உறுப்புகளுக்கு இரத்தத்தை தடையில்லாமல் சீராக எடுத்து செல்வதிலும் இரத்தநாளங்களில்  இரத்த அழுத்தம் ஏற்படாமலும் காக்கிறது.
உப்பு என்றழைக்கப்படும் சோடியத்தின் அளவு அதிகரிக்கும் போது உடலில் பல்வேறு பிரச்னைகள் உண்டாகிறது. மசாலா க்கள் நிறைந்த  உணவு, இனிப்பு, புளிப்பு, காரம், உப்பு நிறைந்த துரித உணவுகள், சாட் வகைகள் அதிகம் விரும்பி உண் ணப்படுகிறது. இதில் இருக்கும் உப்பு  பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமான அளவு உடலில் சேர்கிறது.
 
சமீபத்திய ஆராய்ச்சியிலும் சோடியத்தின் அளவு அதிகரிக்கும் போது இரத்த அழுத்தம் அதிகரிப்பதாக குறிப்பிட்டுள்ளது. பல ஆய்வுகளில்  சோடியத்தின் அளவு அதிகரிக்கும் போது பக்கவாதம் இதயம் தொடர்பான பாதிப்புகள் அதிகரிப்பதாக கூறியுள்ளது. எனவே உப்பின் அளவை  தவிர்ப்பது நல்லது.
 
இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க மதுப்பழக்கத்தை தவிர்ப்பது நல்லது. குறைந்த அளவு ஆல்கஹால் இதயத்துக்கு பாதுகாப்பு கொடுக்கும் என்று சில ஆய்வு பரிந்துரைத்தாலும் அளவுக்கு அதிகமாகும் போது அது எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தும் என்பதும்  கவனிக்கத்தக்கது.
 
உடலில் பொட்டாசியத்தின் அளவு அதிகரிக்கும் போது சோடியத்தின் அளவு குறைவாகும். பொட்டாசியம் நிறைந்த உணவு களை அதிகம்  எடுத்துக்கொள்வதும் இரத்த அழுத்தத்தைக் குறைக்க செய்யும். பொட்டாசியம் நிறைந்த உணவுகள்.
 
உயர் இரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்வதில் பெரும்பங்கு மன அழுத்தத்துக்கு உண்டு. மனதில் அழுத்தம் அதிகரிக்கும் போது இதயத்தின்  துடிப்பும் அதிகரிக்கும். இதனால் இரத்த நாளங்களில் அழுத்தம் உண்டாகிறது. அதனால் முதலில் மன அழுத்தத்தை குறைக்க முயற்சி  செய்வது நல்லது. பணிச்சுமையிலிருந்து மீண்டு வர தியானம், யோகா போன்ற பயிற்சிகளில் ஈடுபடலாம்.

தொடர்புடைய செய்திகள்

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments