Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அல்சர் பிரச்சினை உள்ளவர்களுக்கு அருமருந்தாகும் வெண்பூசணி !!

White pumpkin
, திங்கள், 20 ஜூன் 2022 (10:58 IST)
வெண்பூசணி தோள்களை சீவி அதன் சாற்றுடன் தேன் கலந்து காலையில் வெறும்வயிற்றில் கொடுத்து வர உடம்பிலுள்ள தேவையில்லாத கொழுப்புகளை கரைத்து நல்ல தீர்வை தருகிறது.


வெண்பூசணி நீர்சத்து நிறைந்த காய்கறியாக கருதப்படுவதால் வெயில் காலங்களில் சிறந்த உணவாக எடுத்துக்கொள்ளலாம். அல்சர் பிரச்சினை உள்ளவர்களுக்கு வெண்பூசணி ஒரு அருமருந்தாக விளங்குகிறது.

வெண்பூசணி எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து நேர்மறை எண்ணங்களை தரக்கூடிய சக்தி இதற்கு உள்ளதால் இதனை திருஷ்டிக்காக்க பயப்படுத்துகிறார்கள்.

வெண்பூசணி ஒரு ஸ்பாஞ்ச் போன்ற அமைப்பைக் கொண்டிருக்கும் இது குடலின் உட்பகுதியில் ஆங்காங்கே ஒட்டிக் கொண்டிருக்க கூடிய உணவுகளையும் நச்சுக்களையும் உறிஞ்சி வெளியேற்றிவிடும் .

வெண்பூசணி உடலில் நீர்ச்சத்தை அதிகப்படுத்துவதோடு கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் தூண்டி இரத்தத்தில் இருக்கக்கூடிய தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றும் .

செரிமானம் சார்ந்த பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் காலை வெறும் வயிற்றில் வெண்பூசணி சாறு அருந்திவர மிகவும் நல்லது.  மேலும் இது மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது இது மூளையின் செயல்பாட்டை ஊக்குவித்து ஞாபக சக்தி அதிகரிக்கும்

குழந்தைகளுக்கு காலை வெறும் வயிற்றில் வெண்பூசணி சாறு குடித்து வர கொடுத்துவர அவர்களின் ஞாபக சக்தி பல மடங்காக அதிகரிக்கும் மற்றும் மன நிலையில் ஏற்படக்கூடிய குழப்பங்கள் காரணமாக தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு மிகச்சிறந்த ஒரு பானம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தலைமுடி பிரச்சனைகளை போக்கி வளர்ச்சியை அதிகரிக்கும் வெந்தயம் !!