Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முடி உதிர்வை தடுக்கும் அற்புத மருத்துவ குணம் கொண்ட வெந்தயம்...!

முடி உதிர்வை தடுக்கும் அற்புத மருத்துவ குணம் கொண்ட வெந்தயம்...!
வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன. மேலும் சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியசத்து, பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும், தயாமின், ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலம், வைட்டமின் “ஏ”  போன்றவைகளும் அடங்கியுள்ளன.
கொதிக்கும் நீரில் வெந்தயத்தைப் போட்டு, சிறிது நேரம் ஊற வைத்து, பின் அந்த நீரைக் கொண்டு கூந்தலை அலசி, 10 நிமிடம் ஊற வைத்தால், கூந்தல் உதிர்தல் நின்று, நன்கு வலிமையோடு வளரும்.
 
வெந்தயத்தை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் சேர்த்து கலந்து, அதனை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்தால், பொடுகுத்  தொல்லை மற்றும் வறட்சியைத் தவிர்க்கலாம். மேலும் இந்த முறை கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.
 
வெந்தயத்திலுள்ள எண்ணை பசை தலைமுடிக்கு வளர்ச்சியை, கருமை நிறத்தை தருகிறது. எனவே கூந்தல் தைலங்கள் தயாரிப்பில்  பயன்படுகிறது.
 
வெந்தயத்தை இரவில் நீரில் ஊற வைத்து, காலையில் அதனை அரைத்து பேஸ்ட் செய்து, கூந்தலை அலசிவிட்டு, ஈரமான கூந்தலில் தடவி  30 நிமிடம் ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் அலசினால், பல கூந்தல் பிரச்சனைகளைப் போக்கலாம்.
 
வெந்தயக் கீரையை நீரில் போட்டு கொதிக்க விட்டு, பின் அதனை எடுத்து, தயிர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்து, தலைக்கு தடவி 45 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் அலச வேண்டும். ஒருவேளை வெந்தயக் கீரை இல்லாவிட்டால், வெந்தயத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளலாம்.
 
பொடுகுத் தொல்லை மற்றும் வறட்சியான ஸ்கால்ப் இருந்தால், அதனைப் போக்குவதற்கு வெந்தயப் பொடியில், தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றினை ஊற்றி கலந்து, கூந்தலுக்கு தடவ வேண்டும்.
 
வெந்தயப் பொடியில் பால் சேர்த்து கலந்து, கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பிற்கு தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாதவை எவை தெரியுமா...?