Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிக மருத்துவ குணங்களை கொண்ட பொன்னாங்கண்ணி...!!

அதிக மருத்துவ குணங்களை கொண்ட பொன்னாங்கண்ணி...!!
பொன்னாங்கண்ணி கீரையில் சீமை பொன்னாங்கண்ணி நாட்டுப் பொன்னாங்கண்ணி என்று இருவகை உண்டு. இதில் சீமை பொன்னாங்கண்ணி அழகுக்கு  வளர்க்கப்படுகிறது. மருத்துவ குணம் குறைவு. 

பச்சையாக கிடைக்கும் நாட்டு பொன்னாங்கண்ணிக்கு பல மருத்துவ குணங்கள் கொண்டது. பொன்னாங்கண்ணி கீரையின் தண்டுகளைக் கிள்ளி மண்ணில் ஊன்றி வைத்தாலே கீரை செடி நன்றாக வளர்ந்து விடும். இதனை வீட்டிலேயே வளர்க்கலாம். 
 
பொன்னாங்கண்ணி கீரையில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, தாது சத்து,இரும்புச் சத்து, சுண்ணாம்பு சத்து (கால்சியம்), பாஸ்பரஸ், புரதம், வைட்டமின்கள் 'ஏ' மற்றும் 'சி' போன்ற சத்துகள் நிறைந்துள்ளன.
 
கீரை வகைகளில் சிறந்தது என பொன்னாங்கண்ணி கீரை அழைக்கப்படுகிறது. இது தங்கமான நிறத்தை சருமத்திற்கு தருகிறது. உடல் எடை குறைய சரியான  ஆரோக்கியமான டயட் அவசியம். இதற்கு பொன்னாங்கண்ணி கீரை உதவுகிறது. 
 
பொன்னாங்கண்ணி கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். வாயில் இருந்து வரும் துர்நாற்றம் நமது பலவீனமாக அமையும்.  பொன்னாங்கண்ணி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர வாய் துர்நாற்றம் போகும்.
 
பொன்னாங்கண்ணி கீரையை சாப்பிடுவதால், இதயம் மற்றும் மூளை புத்துணர்வு பெறுகிறது. இதனால் நாம் சுறுசுறுப்பாக செயல்பட முடிகிறது. பொன்னாங்கண்ணி  கீரை மூலநோய் மற்றும் மண்ணீரல் நோய்களைப் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
 
பொன்னாங்கண்ணி கீரையை பொறியல் செய்து சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை பிரச்சனை நீங்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனைத்து பாகங்களும் மருந்தாக பயன்படும் துத்திக்கீரை !!