எளிதில் கிடைக்கும் குப்பைமேனி இலையில் உள்ள ஏராளமான நன்மைகள் !!
மார்புச்சளி, கீல்வாதத்தை போக்கும். நெஞ்சுக்கோழையை நீக்கும். இருமலை கட்டுப்படுத்தும். குப்பைமேனி இலையை அரைத்து அதில் மஞ்சள் பொடி சேர்த்து காயமடைந்த இடங்களில் தடவினால் காயம் விரைவில் குணமாகும்.
குப்பைமேனி பூச்சிகளினால் ஏற்படும் விஷக்கடி, ரத்தமூலம், வாதநோய், ஆஸ்துமா, குடற்புழுக்கள், மூட்டுவலி மற்றும் தலைவலி போன்ற நோய்களை குணப்படுத்தும்.
வயற்றில் இருக்கும் குடற்பூச்சிகளை நீக்கும் தன்மை உடையது. தோல் நோய் நீக்கும்.
குழந்தைகளுக்கு இந்த கீரையை கொடுத்து வந்தால் வயிற்றில் இருக்கும் நாடாப்புழு, கீரிப்பூச்சி ஆகியவை நீங்கும். வெறிநாய் கடியும், சித்த பிரமையும் குணமடையும்.
உடல் வலிக்கு குப்பைமேனி இலையை தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து காய்ச்சி உடலில் தேய்த்து வந்தால் உடல் வலி நீங்கும்.
குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், பருக்கள் மறைந்து முகம் பளபளப்பாகும்.
மூலநோய் உள்ளவர்கள் குப்பைமேனி இலையை அரைத்து துவையல் போல சாப்பிட்டு வந்தால் மூல நோய் விரைவில் குணமாகும்.
நோய்வாய்ப்பட்டு நீண்ட நாட்களாகப் படுக்கையில் இருந்தவர்களுக்கு படுக்கை புண் வரும். அப்படி படுக்கை புண் வந்தவர்களுக்கு, குப்பைமேனி இலையை உலர்த்தி பொடி செய்து புண் இருக்கும் இடத்தில் கட்டுப்போட, புண்கள் ஆறும்.
குப்பைமேனி இலையைப் நீரில் கொதிக்கவைத்து, கஷாயமாகச் செய்து, அதனுடன் உப்பு சேர்த்துக் குடித்துவந்தால், மலம் இளகும்.
அடுத்த கட்டுரையில்