இமய மலைப் பகுதிகளிலிருந்தும், நேபாளப் பகுதியிலிருந்தும் ஒரு வகை உப்பு எடுக்கப்படுகிறது. ஆம். இவ்வகை உப்புக்கு கருப்பு உப்பு என்று பெயர். இதில் இருப்பதும் சோடியம் குளோரைடு தான். கருப்பு உப்பில், கடல் உப்பை விட சோடியம் குறைவாகக் காணப்படுகிறது.
உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்று ஒரு பழமொழி உண்டு என்பது நினைவிருக்கிறதா? உப்பு என்பது ருசிக்காக மட்டும் உட்கொள்ளப்படுவது அல்ல அது, உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் உறுதுணையாக இருக்கிறது.
நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் உப்பிற்கு, 'சோடியம் குளோரைடு' என்று பெயர். ஒரு நபருக்கு, ஒரு நாளைக்கு, பத்து கிராம் உப்பு மட்டுமே போதுமானது என்று மருத்துவக் குறிப்புகள் கூறுகின்றன. ஆனால், நாம் உணவில், ஊறுகாய், சிப்ஸ், பதப்படுத்தப்பட்ட உணவுகளை வஞ்சனை இல்லாமல் சேர்த்துக் கொள்கிறோம். அதனால், ரத்தக் கொதிப்பு போன்றவை நம்மை அணுகி விடுகின்றன.
இனிப்பு என்றால், சர்க்கரைக்குப் பதில் வெல்லம், கருப்பட்டி போன்றவைகளையும், காரம் என்றால், மிளகாய்க்குப் பதிலாக மிளகு போன்றவற்றையும் சேர்த்துக் கொள்கிறோம். ஆனால், உப்புக்குப் பதிலாக வேறு எதையாவது உபயோகிக்க முடியுமா? உவர்ப்பு என்னும் சுவை உப்பின் மூலம் மட்டுமே கிடைக்கும். பொதுவாக கடல் நீரிலிருந்துதான் உப்பு பெறப்படுகிறது. ஆனால், பாறைகள் மூலமும் உப்பு பெறப்படுகிறது.
மூட்டு வலி, தசை பிடிப்பிற்கு, கருப்பு உப்பை வெறும் வாணலியில் நன்றாக வறுக்கவும். அதை, கொட்டி விடாதபடி ஒரு கெட்டியான துணியில் மூட்டையாகக் கட்டிக் கொள்ளவும். வலி இருக்கும் இடங்களில் உப்பு ஒத்தடம் கொடுத்தால், நல்ல பலன் தெரியும்.
சாப்பிட்ட பின், வயிறு உப்புசம், போன்ற பிரச்னைகள் இருந்தால், சமையலில் கடல் உப்பிற்குப் பதிலாக கருப்பு உப்பைச் சேர்த்துக் கொள்ளவும். மருந்துக்கு கடைகளில் விற்கும் ஜீரண மாத்திரைகளில், கருப்பு உப்பு தான் சேர்க்கப்படுகிறது.
ஆஸ்துமா, அலர்ஜி, சைனஸ் தொந்திரவு, ஏன் சாதாரண ஜலதோஷத்திற்குக் கூட, மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும். அந்த நேரங்களில், இன்ஹேலரில், கருப்பு உப்பினை பொடித்துப் போட்டு சுவாசித்தால், மூச்சுத்திணறல் இருக்காது.
நீரிழிவு நோய்காரர்களை இன்சுலின் போட்டுக் கொள்வதிலிருந்து விடுவிக்கிறது. கருப்பு உப்பை உணவில் சேர்த்துக் கொள்வதால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகப்படுத்தப்படாமல், பாதுகாப்பு வளையத்திற்கு உள்ளேயே வைத்திருக்கிறது.