Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏராளமான உடல் ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் பீர்க்கங்காய் !!

Advertiesment
ஏராளமான உடல் ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் பீர்க்கங்காய் !!
பீர்க்கங்காயில் வைட்டமின் சி, துத்தநாகம், இரும்பு, ரிபோஃப்ளோ வின், மெக்னீசியம், தயாமின் உள்ளிட்ட அனைத்துச் சத்துகளும் இதில் உள்ளன. இது இன்னும் ஏராளமான நன்மைகளை நமக்கு வழங்குகிறது.
 


பீர்க்கங்காயில் ஏற்கனவே குறைந்த கலோரிகள் காணப்படுகின்றன. இதில் நார்ச்சத்துக்கள் அதிகளவு காணப்படுகிறது. கொழுப்பை சரியாக ஜீரணித்து உறிஞ்சும்  உணவு இழைகளால் நிரம்பியுள்ளது.
 
பீர்க்கங்காயை சாப்பிட்டால் வயிறு நிரம்பிய எண்ணம் தோன்றும். அதனால் நீங்கள் நொறுக்கு தீனிகளை வாங்கி சாப்பிட மாட்டீர்கள். இதனாலேயே உங்க உடல்  எடையை குறைக்க முடியும்.
 
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. பீர்க்கங்காயில் உள்ள பெப்டைடுகள் மற்றும் ஆல்கலாய்டுகள் உள்ளன. இவை உங்கள் வளர்ச்சிதை  மாற்றத்தை துரிதப்படுத்தும்.
 
பீர்க்கங்காய் நமது இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது. இது உடலில் சர்க்கரையை முறையாக சுரக்கவும் உறிஞ்சவும் உதவுகிறது.
 
இரும்புச் சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்படுகிற நிறைய பேர் இரத்த சோகை போன்ற பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.
 
சரும பிரச்சனைகள் பெரும்பாலும் குடல் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. எனவே வாரத்திற்கு இரண்டு முறையாவது பீர்க்கங்காய் சேர்ப்பது உங்க சருமத்தை பளபளக்க வைக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செப்பு பாத்திரத்தை பயன்படுத்துவது உடல் நலத்திற்கு நல்லதா...?