பாசிப்பயறில் ஏராளமான வைட்டமின்கள், கனிமங்கள் நிறைந்துள்ளது. இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் போன்றவற்றையும் இது உள்ளடக்கியுள்ளது. இதிலுள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைத்து இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. இதனை வழக்கமாக சாப்பிட்டு வந்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாக கருதப்படுகிறது. ஏனெனில் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைப்பதற்கு உறுதுணையாக இருக்கிறது.
நார்ச்சத்துகள் மிகுந்து காணப்படுவதால் இதை தாராளமாக சாப்பிடலாம். இரும்புச்சத்து குறைபாடு இருப்பவர்களுக்கு இரத்த சோகை ஏற்படும் அபாயம் உள்ளது. பாசிப்பயறில் அடங்கியுள்ள இரும்புச்சத்து இரத்த சோகை ஏற்படாமல் நம்மை காக்கிறது.
புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் மிகுதியாக இதில் நிறைந்துள்ளது. கொழுப்பை குறைத்து உடல் எடை குறைப்பதற்கும் இது வழிவகை செய்கிறது.
பயறுகளும், தானியங்களும் பல மருத்துவக் குணங்கள் கொண்டவை. பயறு வகைகளில் அமினோ புளிமங்களும் குறிப்பாக லைசின் மிக அதிக அளவுகளில் காணப்படுகின்றன. ஆனால், தானியங்களில் லைசின் குறைவாகவே இடம் பெற்றிருக்கின்றது.
பயறு வகைகளில் அதிகமாக வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் ரிபோபிளேவின் அதிகம் அடங்கியுள்ளது. எனவே, பயறு வகைகள் வைட்டமின் பி பற்றாக்குறையைத் தவிர்த்திடும். பச்சைப் பயறு மற்றும் தட்டைப்பயற்றில் புரதச்சத்துக்கள் மிகுந்து காணப்படுகின்றன. அதை அப்படியே பயன்படுத்துவதைவிட, முளைக்கட்டி பயன்படுத்துவதன் மூலம் நல்ல பயன் கிடைக்கும்.
முளைக்கட்டிய பயற்றில் வாயுத்தன்மையை உண்டு செய்யும் தன்மை கிடையாது. எளிதில் செரிமானமும் ஆகும். பயறுகள் முளைவிடும் தறுவாயில் அஸ்கார்பிக் அமிலமான வைட்டமின் சி அதிகம் காணப்படுகின்றது. முளைக்கட்டிய பயறுகளில் பிற வைட்டமின்களும் கூடுதலாகக் காணப்படுகின்றன.