Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும் பழங்களுள் ஒன்று பப்பாளி !!

நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும் பழங்களுள் ஒன்று பப்பாளி !!
வைட்டமின் சி நிறைந்த பப்பாளி நோய்கள் மற்றும் தொற்றுநோய்களுக்கு எதிராக போராட, நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த சிறந்த உணவு வகைகளில்  ஒன்றாகும்.
 


பப்பாளியில் ஏராளமான ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளது என்பது ஒரு நல்ல விஷயம். இந்த ஆண்டிஆக்ஸிடண்ட்கள் கரோட்டினாய்டுகள் எனக்  குறிப்பிடப்படுகின்றன.
 
பப்பாளி வைட்டமின் சி மிக அதிகம் காணப்படும் ஒன்றாக இருப்பதால், தினமும் ஒரு கிண்ணம் நிறைய இந்தப் பழம் உட்கொண்டு வைட்டமின் சி-யை  அதிகரித்துக்கொள்ளவும்.
 
பப்பாளி முக்கியமான பழ வகைகள் ஒன்றாகும். பப்பாளி காய் சாம்பார் கூட்டு போன்ற உணவுகள் தயாரிப்பதிலும் கூட பயன்படுகின்றது. பப்பாளிப் பழத்தில் வைட்டமின் “ஏ” நிறைந்துள்ளது. 
 
ஆஸ்துமா நோய் கொண்டவர்கள் பப்பாளியை தொடர்ந்து சாப்பிடுவதால் அதன் அளவு குறைந்து கட்டுப்பாடாக இருக்கும்.
 
தினமும் 1 துண்டு பப்பாளிப் பழம் சாப்பிடுவதால் செரிமான சக்தி அதிகரிக்கும். கண்பார்வை தெளிவடையும். மாலைக் கண் நோய் குணமாகும். மலம் கழிப்பது  எளிதாகும். இரத்தமும் சுத்தமாகும்.
 
பப்பாளியின் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் முதுமையடையும் செயல்பாட்டை மெதுவாக்குகிறது மேலும் வெகு சீக்கிரம் தோன்றக்கூடிய முதுமையடையும் வெளிப்புற  அறிகுறிகளைத் தடுக்கிறது.
 
வயதைக் குறைத்துக் காட்டக் கூடிய தன்மை பப்பாளிக்கு உண்டு. எனவே அதிகமாக பப்பாளி உண்பதால் செல்கள் வயதாவதைக் கட்டுப்படுத்தும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏராளமான நோய்களுக்கு மருந்தாகும் கடுக்காய் !!