Publish Date: Wed, 20 Apr 2022 (11:24 IST)
Updated Date: Wed, 20 Apr 2022 (11:38 IST)
ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் வராமல் தடுக்கிறது. ஆரஞ்சு பழத்தில் உடலுக்குத் தேவையான அனைத்து உயிர்ச்சத்துக்களும் நிறைந்துள்ளன.
உடல் எடையை குறைப்பதற்கு ஆரஞ்சு பழத்தை தினமும் சாப்பிடலாம். மூட்டுவலியை குணப்படுத்துவதற்கு உதவுகிறது.
ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆரஞ்சு பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் இதயத்தை ஆரோக்கியமாக வைப்பதற்கு உதவுகிறது.
நம் உடலில் உள்ள கொழுப்பை குறைப்பதற்கு உதவுகிறது. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் ஏ இருப்பதால், கண்பார்வையை சீராக வைப்பதற்கு உதவுகிறது. ஆரஞ்சு பழத்தில் உள்ள மெக்னீசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைப்பதற்கு உதவுகிறது.
ஆரஞ்சு பழத்தில் உள்ள ஃபோலேட் என்னும் ஊட்டச்சத்து ஆரோக்கியமான விந்தணுக்கள் உருவாக உருதுணையாக உள்ளது.
ரத்த குழாய்களில் சேரும் கெட்ட கொழுப்பினை அகற்ற ஆரஞ்சு பழம் பயன்படுகிறது. மேலும் இதய பிரச்னைகள் வராமல் தடுக்கிறது. ஜீரண சக்தியை அதிகப்படுத்தி உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுகளை வெளியேற்றுகிறது.