Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பசும் பாலில் உள்ள சத்துக்களும் பயன்களும்...!!

Webdunia
பால் என்பது கால்சியம் நிறைந்த, உடலுக்கு தேவையான ஒரு முழு உணவாக பார்க்கப்படுகிறது. உடல் எடையை பாதுகாக்கவும், கலோரிகளை எரிக்கவும் பால்  உதவுகிறது. மேலும் பால் குடிப்பதால் உடலுக்கு நல்ல சக்தியும், எலும்புகளுக்கு உறுதியும் அளிக்கிறது.

நாட்டு பசுக்களின் பாலில் உடல் வலிமை தரும் வகையிலான புரதம் உள்ளது. பசும்பால் 90% நீர்தன்மையுடன் அடர்த்தி குறைவாகவும், எளிதில் ஜீரணிக்க கூடியது.
 
நாட்டு பசும்பாலில் உள்ள பீட்டா கெசின் என்னும் புரதம் உடலை வலிமை அடைய செய்கிறது. கலப்பின பசும்பாலில் உள்ள பீட்டா கெச் என்னும் புரதம் பீட்டா  கேசோ மார்பின் என்று சொல்லப்படுகின்ற நமது உடலுக்கு ஒவ்வாத புரதப்பொருட்களை உணவுப் பாதையில் உண்டாக்குகின்றது.
 
சித்த மருத்துவ முறையில் மூலநோய், இரத்த மூலம், மஞ்சள் காமாலை, குடற்புண், தோல் நோய்கள், போன்ற நோய்களை குணப்படுத்த பாரம்பரிய சித்த மருத்துவர்கள் மூலிகைகளை அரைத்து காய்ச்சாத பசும்பாலில் கலந்து கொடுத்து இன்றும் குணப்படுத்தி வருகின்றனர்.
 
குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு மிஞ்சிய வலிமை தரும். பாலை கரந்து சுத்தமான துணியில் 3 முறை வடிகட்டி சூடு ஆறுவதற்கு முன்பு உண்பது மிகவும் உத்தமம்.
 
பசும்பாலில் 90% சதவீதம் நீர்த்தன்மை உண்டு. பசும்பாலில் புரதம், கொழுப்பு, மற்றும் கார்போஹைட்ரெட் உள்ளது. உடல் பருமனாக இருப்பவர்கள், ஜீரண கோளாறு  இருப்பவர்கள், பசும்பாலை குடிக்கலாம். 

தொடர்புடைய செய்திகள்

அடிக்கடி பிரியாணி சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு தீங்கு ஏற்படுமா?

ஓசியில் கிடைக்கும் கருவேப்பிலையால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

கோடை காலத்திற்கேற்ற பழச்சாறுகள் என்னென்ன?

கோடை காலத்தில் மோர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

ஈஸியா செய்யலாம் பேச்சிலர் ஸ்டைல் எம்டி குஸ்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments