Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தயிரில் உள்ள சத்துக்களும் அதன் நன்மைகளும் !!

தயிரில் உள்ள சத்துக்களும் அதன் நன்மைகளும் !!
, திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (17:57 IST)
தயிரில் உள்ள சத்துக்கள் மற்றும் எளிதில் ஜீரணிக்கக்கூடிய புரதம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது.


பல்வேறு வகையான இனிப்பு உணவுகளை தயாரிக்க தயிரை பயன்படுத்தப் படுகிறது. தயிரில் தாதுச் சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இது பல்வேறு அழகு சாதனப் பொருட்களின் முக்கிய அங்கமாக பயன்படுத்தப் படுகிறது.

தயிர் பேஸ் மாஸ்க் ஆகவும் பயன்படுத்தப்படுகிறது. தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வெயில் காலங்களில் உடல் உஷனத்தை குறைக்க குளிர்பானங்களில் பயன்படுத்தப்படுகிறது. பாலிலிருந்து எடுக்கப்பட்டிருந்தாலும் தயிர் பாலை விட எளிதில் ஜீரணம் ஆகும். பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32% பால்தான் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும். வெண்டைகாய் வதக்கும் பொழுது ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து கொண்டால் நிறம் மாறாமல், பிசுபிசுக்காமல் இருக்கும்.

பாலை தயிராக மாற்றும் பொழுது அதில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள், நம் குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. தயிரில் உள்ள பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.

தயிரில் புரோட்டீன், ரிபோப்லாவின், கால்சியம், உயிர்ச்சத்து பி6, மற்றும் உயிர்ச்சத்து பி12 போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. பாலில் உள்ள புரோட்டீனை விட பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிருக்கு புரோட்டின் சக்தி அதிகம் உள்ளது. வயிற்றுப்போக்கை சரிசெய்யும் நமக்கு வயிற்று வலி வயிற்றுப்போக்கு ஏற்படும்போது தயிர் ஒரு கப்புடன், வெந்தயம் சேர்த்து சாப்பிட்டால் வயிற்று வலியும், வயிற்றுப் போக்கும் நின்றுவிடும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்குமா வெங்காயம்...?