Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெள்ளரிக்காயில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும் !!

Advertiesment
வெள்ளரிக்காயில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும் !!
வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து, கடும் நாவறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும். உடலைக் குளிரவைக்கும். வெள்ளரியில் தாதுப்பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின், இத்தனையும் வெள்ளரியில்  உண்டு. 

இவற்றைவிட, நம் இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் வெள்ளரியில் மிகுதி. ஈரல், கல்லீரல் இவற்றில் சூட்டைத் தணிக்கும் ஆற்றல்  வெள்ளரிக்கு இருப்பதால் அப்பாகங்களில் ஏற்படும் நோய் தணியும்.
 
மலத்தைக் கட்டுப்படுத்தும் பித்தத்தைக் குறைக்கும். உள்ளரிப்பு, கரப்பான் போன்ற சரும நோய்களைப் போக்கும் ஆற்றல் வெள்ளரிக்கு உண்டு. புகைப் பிடிப்போரின் குடலை நிகோடின் நஞ்சு சீரழிக்கிறது. 
 
நஞ்சை நீக்கும் அற்புக ஆற்றல் வெள்ளரிக்காய்க்கு உண்டு. மூளைக்கு மிகச்சிறந்த வலிமை தரக்கூடியது வெள்ளரி. மூளை வேலை அதிகம் செய்து கபாலம் சூடு அடைந்தவர்களுக்குக் குளிர்ச்சியும், மூளைக்குப் புத்துணர்ச்சியும் வெள்ளரிக்காய் வழங்கும்.
 
வெள்ளரி போன்ற நீர் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உங்கள் உணவில் அதிக தண்ணீரைப் பெறலாம். அனைத்து பழங்கள் மற்றும் காய்கறிகளில்  கணிசமான அளவு தண்ணீர் உள்ளது. 
 
வெள்ளரிக்காயில் 96% தண்ணீர் சத்து காணப்படுகிறது. இது உங்க நீரேற்று தேவையை பூர்த்தி செய்ய உதவும். உங்கள் அன்றாட நீரேற்றம் தேவைகளில் 40% வரை  உணவில் இருந்து பெறுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது. எனவே தினந்தோறும் ஒரு வெள்ளரிக்காய் என சாப்பிட்டு வாருவது நல்லது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் பாதாம் !!