Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருப்பு மிளகின் சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் !!

Webdunia
சனி, 25 ஜூன் 2022 (16:24 IST)
கருப்பு மிளகில் பைபரின் என்கிற வேதிப்பொருள்  இருப்பதால் மிளகு காரமான சுவை கொண்டரிக்கிறது. மிளகின் மருத்துவ குணங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யும்.

இருமல் தொல்லைகளில் கருப்பு மிளகு சிறந்தது.  ஒரு தேக்கரண்டி இயற்கை தேனில் 1-2 சிட்டிகை கருப்பு மிளகு தூள் கலக்கவும். இருமலை போக்க  ஒரு நாளைக்கு 3-4 முறை சாப்பிடவும்.

அரை தேக்கரண்டி மிளகு சேர்த்து ஒரு தேக்கரண்டி வெல்லம் உட்கொள்வது பசியை அதிகரிப்பதுடன் செரிமான பிரச்சினைகளையும் குணப்படுத்தும்.

மிளகு எண்ணற்ற ஊட்டசத்துக்கள்  மற்றும் மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆஸ்துமா , சளி, இருமல் போன்ற சுவாசப் பிரச்சினைகளுக்கு மிளகு ஒரு சிறந்த மூலிகை மருந்தாகும்.

ஜலதோஷத்தின் முதல் கட்டத்தில், மூக்கிலிருந்து ஒழுகும் நீரை வெளியேற்றுவதன் மூலம், கருப்பு மிளகு  நிவாரணத்தை தருகிறது. சளி மற்றும் இருமல் டானிக்குகளில் மிளகு சேர்க்கப்படுகிறது. இது சுவாசக் குழாயில் உள்ள சளி மற்றும் கபத்தை உடைக்க உதவும்.

மிளகில் உள்ள பைபரின் வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமில சுரப்பை அதிகரிப்பதின் மூலம் உணவை எளிதாக ஜீரணிக்க உதவுகிறது. செரிமானத்தை எளிதாக்குகிறது, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.

மிளகில் மாங்கனீசு, இரும்பு, பொட்டாசியம், வைட்டமின்-சி, வைட்டமின் கே, மற்றும் நார்ச்சத்து ஆகியவை ஒரு சிறு மிளகில் அடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தினமும் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

கேழ்வரகு உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

அடுத்த கட்டுரையில்
Show comments