Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிகவும் சுவையான முறையில் மீன் ப்ரை செய்ய !!

Webdunia
சனி, 25 ஜூன் 2022 (15:25 IST)
தேவையான பொருட்கள்:

மீன் - 5 துண்டுகள்
தயிர் (அ) எலுமிச்சை  - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் (தனியா)  - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

அரைப்பதற்கு தேவையான பொருட்கள்:

மல்லி (தனியா) - 1 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1/4 டீஸ்பூன்
பட்டை  - 1/4 இன்ச்
கிராம்பு - 1
சின்ன வெங்காயம்  - 8
பூண்டு - 4 பற்கள்



செய்முறை:

முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் மீனை நன்கு கழுவி, அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, அத்துடன் அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து நன்கு பிரட்டி 30 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.

பின்பு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், அதில் மீன் துண்டுகளைப் போட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மிகவும் சுவையான மீன் ப்ரை தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments