Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும் நூக்கல்...!!

Webdunia
நூக்கல் காய்கறியில் ஏ, பி, சி வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு மற்றும் பொட்டாசியம் கூறுகள் உள்ளன.


ஒரு கப் நூக்கலில் 27 மில்லி கிராம்  சோடியம் உள்ளது. மேலும் வாழைப்பழத்தை விட அதிக பொட்டாசியம் உள்ளது. இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
 
நூக்கல் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்தது மற்றும் மிகக் குறைந்த அளவில் கொழுப்பு சத்தை கொண்டுள்ளது. இதில் இருக்கும் நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவு மற்றும் இரைப்பை குடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
 
நூக்கல் காய்கறியை பச்சையாக சாப்பிடலாம் அல்லது கீரைகளை போல சமைத்தும் சாப்பிடலாம். இது சாப்பிடுவதற்கு ப்ரோக்கோலி, முட்டைகோஸ் போன்ற சுவையை கொண்டது. இதன் இலைகள் கூட சாப்பிடக் கூடியவை.

இதன் இலைகளில் தாதுக்கள், கரோட்டின்கள், வைட்டமின்-ஏ, வைட்டமின்-கே மற்றும்  வைட்டமின் பி போன்ற சத்துக்கள் உள்ளன.
 
நூக்கலில் ஆரஞ்சு நிறத்தை விட வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது பற்கள் மற்றும் ஈறுகளை பராமரிக்க உதவுகிறது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடி புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. மேலும் நுரையீரலை சுத்தம் செய்ய இதன் தண்ணீர் பயன்படுகிறது.
 
நூக்கல் அழற்சி எதிர்ப்பு பண்பை கொண்டுள்ளது. இது இன்சுலின் எதிர்ப்பு மற்றும் நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. உடல் எடையை கட்டுபடுத்துகிறது.
 
நூக்கலில் வைட்டமின் ஏ சத்து அதிக அளவில் உள்ளது. இந்த சத்து கண்புரை உருவாவதை தடுக்கிறது. மேலும் இது கண்களுக்கு பாதுகாப்பை வழங்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல் சூட்டைக் குறைக்கும் எளிய வழிகள்..!

சீரக நீரா? தனியா நீரா? உடல் எடையைக் குறைக்கவும் ஆரோக்கியத்தைப் பேணவும் எது சிறந்தது?

திங்கட்கிழமைகளில் மாரடைப்பு அபாயம் அதிகம்: மருத்துவர்கள் எச்சரிக்கை!

சத்துக்கள் நிறைந்த ஈசல்: ஓர் அரிய உணவும், மருத்துவ குணங்களும்

இந்தியாவில் கூடும் எடை அதிகரிப்பு பிரச்சினை! 100 கோடிக்கு விற்பனையாகும் எடைக்குறைப்பு மருந்துகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments