Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முழுத்தாவரமும் மருத்துவ பயன்கள் நிறைந்து காணப்படும் நொச்சி இலை !!

முழுத்தாவரமும் மருத்துவ பயன்கள் நிறைந்து காணப்படும் நொச்சி இலை !!
நொச்சி இலை, பூ, வேர், பட்டை ஆகியவை அனைத்தும் மருத்துவப் பயன்கள் கொண்டவை. வயிற்றுவலி, ஆஸ்துமா, மூச்சுக்குழல் அழற்சி, கண்நோய், வீக்கங்கள், வெண்குஷ்டம், கணைய வீக்கம் ஆகியவற்றினைப் போக்கக் கூடியது. 

நொச்சி இலை, கொசுவை விரட்டும் தன்மை படைத்தது. வீடுகளில் வளர்க்க மிகவும் ஏதுவாக இருக்கும். இவற்றை கால்நடைகள் உண்ணாது. கிராமப்புறங்களில் வயல் வெளிகளிலும், வாய்க்கால், வரப்பு ஓரங்களிலும் இந்த மூலிகை செடியை அதிகமாக காணலாம். 
 
நொச்சி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, ஆவி பிடித்து வந்தால் மூக்கடைப்பில் தொடங்கி ஜலதோஷம், சளித் தொல்லை, தலைபாரம், தலைவலி என அனைத்துப் பிரச்னைகளிலும் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
 
தலைமுடி வளர்தலை ஊக்குவிக்கும். மூட்டுவலிக்கு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. நொச்சி, சிறு மரவகையைச் சேர்ந்த தாவரம். கருநொச்சி அதிக   மருத்துவகுணம் வாய்ந்தது. 
 
நொச்சி இலைகள் போட்டு காய்ச்சிய நீரில் குளித்தால் பயன் அடைவர். நொச்சி இலையின் புகைக்கு கொசுக்கள் வராது. காய்ந்த இலைகளின் புகை தலைவலி மற்றும் சளி அடைப்பினை நீக்கும். நாள்பட்ட இலைச்சாறு கொண்டு தயாரிக்கப்பட்ட தைலம் காசநோய் புண்களை ஆற்ற  வல்லது. 
 
நொச்சி இலையை அரைத்து மண்ணீரல் வீக்கங்களுக்குப் பற்றுப் போடலாம். தேமல் உள்ள இடங்களில் நொச்சி இலைச் சாற்றைப் பூசினாலும் நிவாரணம்  கிடைக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எண்ணற்ற மருத்துவ பலன்களை கொண்ட சீந்தில் கொடி !!