Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை தீர்க்கும் வேப்ப எண்ணெய் !!

பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை தீர்க்கும் வேப்ப எண்ணெய் !!
, புதன், 20 ஜூலை 2022 (10:13 IST)
வேப்ப எண்ணெய்யில் மிகவும் சக்தி வாய்ந்த வேதிப்பொருட்கள் உள்ளன. வேப்ப எண்ணெய் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது.


அனைத்து விதமான சுவாசப் பிரச்சனைகளையும் நீக்கும் தன்மை வேப்ப எண்ணெய்க்கு உண்டு. கெட்ட சுவாசம், ஆஸ்துமா போற்றவற்றை குணப்படுத்த வேப்ப எண்ணெய் பயன்படுகிறது.

முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் முகத்தை வறட்சியில் இருந்து பாதுகாக்கின்றன. தூசு, அழுக்கு போன்றவை நம் முகத்தில் படும்போது முகத்தில் உள்ள நுண்துளைகள் அடைபட்டு கிருமி தொற்றின் காரணமாக  முகப்பருக்கள் ஏற்படுகின்றன.

வேப்ப எண்ணெய்யில் ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் கரட்டினாய்டு சத்துகள் அதிகம் இருக்கின்றன. வேப்ப எண்ணையை வாரத்திற்கு ஒரு முறை தோலில் நன்கு தடவிய பின்பு குளித்து வந்தால் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து, இளமை தோற்றத்தை அதிகரிக்கும்.

வேப்ப எண்ணெய்யை எடுத்து அதை சிறிது நீரில் கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் சருமத்தின் எண்ணெய் பசைக் கட்டுப்படும். மேலும் முகப்பரு போன்ற சரும பிரச்சனைகளும் அகலும்.

வேப்ப எண்ணெய்யை பஞ்சில் நனைத்து பல்லில் வைத்தால் பல் வலிக்கு உடனே நிவாரணம் கிடைக்கும். ஈறுகளைப் பாதுகாக்கவும், வாயில் உண்டாகும் கிருமிகளை ஒழிக்கவும் வேப்ப எண்ணெய் பெரிதும் பயன்படுகிறது.

குழந்தைகள் பலருக்கும் அவர்களின் வயிறு மற்றும் குடல்களில் பூச்சி தொல்லைகள் ஏற்படக்கூடும். இதற்கு அரை டீஸ்பூன் அளவு வேப்ப எண்ணெய்யை இந்த பிரச்சனை இருக்கும் குழந்தைகளை குடிக்க வைத்து விட்டால் அவர்களின் வயிற்றில் இருக்கும் பூச்சிகள் அழிந்து, அவர்கள் மலம் கழிக்கும் போது அனைத்தும் வெளியேறிவிடும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பீன்ஸின் மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்துக்கொள்வோம் !!