Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் வேப்ப இலை சாறு !!

Webdunia
வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (13:47 IST)
வேப்ப இலையில் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. தினமும் வேம்பு ஜூஸ் அருந்தி வந்தால் அந்த இலைகளில் உள்ள நார்ச்சத்தானது செரிமானத்தை சீராக்கி நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்க உதவுகிறது. இதனால் உங்கள் குடல் இயக்கம் மேம்பட்டு மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.


வேப்ப இலைகளில் தயாரிக்கப்பட்ட ஜூஸை தினமும் அருந்தி வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்க முடியும். வேம்பில் அதிகளவு கால்சியம் உள்ளதால், நமது எலும்புகளுக்கு நன்மை தருவதாக இருக்கிறது. அதுமட்டுமின்றி புற்றுநோய்க்கு கூட வேம்பு மருந்தாக அமைகிறது. வேப்ப இலை சாறு, எலுமிச்சை சாறு மற்றும் தேன் இவற்றை ஒன்றாக கலந்து தினமும் பருகி வந்தால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும்.

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க வேம்பு உதவுகிறது. எடை இழப்புக்கு அதிகரித்த வளர்சிதை மாற்ற விகிதம் மிகவும் முக்கியமானது. வேம்பில் உள்ள ஆக்ஸிஜனேற்றங்கள் அதிக அளவு கலோரிகளை எரித்து உங்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

வேம்பு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. தினமும் வேம்பு ஜூஸ் அருந்தி வந்தால் நச்சுக்கள் வெளியேறி இரத்தம் சுத்திகரிக்கப்படுவதன் மூலம் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் ராசாயனங்கள் வெளியேறுகிறது. இதனால் உடலில் இருந்து ஆரோக்கியமற்ற நச்சுக்கள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும்.

வேப்பிலை: குழந்தைகள் அதிகம் அவஸ்தைப்படும் குடல் புழுக்களை அழித்து பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். அதற்கு குழந்தைகளுக்கு காலையில் வெறும் வயிற்றில் சிறிது வேப்பிலை கொழுந்தை அரைத்து சாப்பிட கொடுக்கலாம் அல்லது வேப்பிலையை ஜூஸ் வடிவிலும் கொடுக்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூத்த குடிமக்களுக்கு பின்ஹோல் பியூப்பிலோபிளாஸ்டி மூலம் சிகிச்சை! - டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை!

`அல்சைமர்' எனும் மறதிநோய்.. இந்த நோயை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

வாய்வு வெளியேறும் போது சத்தம் வருவது ஏன்?

வெயில் காலத்திற்கேற்ற நன்னாரி சர்பத்.. சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா?

கேனில் அடைக்கப்பட்ட பானங்கள் குடித்தால் புற்றுநோய் வருமா? அதிர்ச்சி தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments