Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் வேப்பம் பூ !!

Advertiesment
Neem
, சனி, 18 ஜூன் 2022 (17:45 IST)
வேப்ப மரத்தின் விதைகள், பட்டை மற்றும் இலைகள், பூ என அனைத்து பாகங்களும் நிரூபிக்கப்பட்ட ஆண்டிசெப்டிக், ஆன்டிவைரல், ஆண்டிபிரைடிக், அழற்சி எதிர்ப்பு, அல்சர் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன.


வேப்ப இலைகளைப் போல் வேப்பம்பூ ஒரு சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. பொடுகு மற்றும் அரிப்பு போன்றவற்றிற்கு உலர்ந்த வேப்பம் பூ மருந்தாக பயன்படுகிறது.

உலர்ந்த வேப்பம் பூக்கள் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்குகின்றன. மசாஜ் எண்ணெய்கள், கிரீம்கள் மற்றும் அஸ்ட்ரிஜென்ட்கள் உட்பட பல்வேறு அழகுசாதனப் பொருட்கள் இந்த பூவை பயன்படுத்தி தயாரிக்கலாம்.

வாயுத்தொல்லை, ஏப்பம் தொல்லை, பசியின்மை போன்ற கோளாறுகளுக்கு இந்த பூக்களை நன்றாக மென்று உண்டால் குணம் கிடைக்கும்.

வேப்பம் பூ செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக இந்திய சமையலில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இவை சாதம், ரசம், பருப்பு மசாலா கலவைகள், உகாதி பச்சடி போன்றவற்றை தயாரிக்கவும் சமையலில் பயன்படுத்தப்படுகிறது.

தேனுடன் வேப்பம்பூ சேர்த்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடல் எடையில் மாற்றத்தை உருவாக்கும். வேப்பம்பூ கொழுப்பு வளர்சிதை மாற்றத்திற்குக் காரணமான ஹார்மோனைத் தடுக்க உதவுகிறது.

ஒரு கைப்பிடி வேப்பம்பூவை , நீரில் ஊறவைத்து தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் பருமன் குறையும்

இந்த பூவை கொதிக்கும் நீரில் போட்டு ஆவி பிடிக்க காதில் சீல் வடிதல் குணமாகும். பூவை வாயில் போட்டு நன்றாக அரைத்து சாப்பிட்டால் தொண்டை புண் குமாமாகும். வேப்பம்பூவில் துவையல், ரசம் செய்து சாப்பிட்டு வந்தால் பித்த மயக்கம், வாந்தி குணமாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தினமும் உலர் திராட்சையை சாப்பிடுவதால் ரத்தசோகை சரியாகுமா...?