Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இயற்கையான முறையில் அடர்த்தியான புருவங்களைப் பெற சில டிப்ஸ்

இயற்கையான முறையில் அடர்த்தியான புருவங்களைப் பெற சில டிப்ஸ்
, சனி, 1 ஏப்ரல் 2017 (12:32 IST)
புருவங்கள் தான் ஒருவரின் முகத்தை அழகாக வெளிக்காட்டுவது சிலருக்கு புருவங்களில் முடிகள் அடர்த்தியின்றி இருக்கும். அத்தகையவர்கள் தங்கள்புருவங்களை பென்சில் கொண்டு வரைந்து கொள்வார்கள். இன்னும் சிலர் இதற்காக நிறைய பணம் செலவழித்து சிகிச்சைகளை மேற்கொள்வார்கள். ஆனால் இப்படி பணத்தை செலவழிப்பதற்கு பதிலாக, வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டு புருவங்களை தினமும் மசாஜ் செய்து வந்தால், நிச்சயம் நல்ல அடர்த்தியான நீங்கள் விரும்பும் புருவத்தை பெறலாம்.
 





















தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் நிச்சயம் முடியின் வளர்ச்சியைத் தூண்டக்கூடியவை. எனவே இந்த எண்ணெயை தினமும் புருவங்களின் மீது தடவி வர, புருவங்கள் நன்கு வளரும்.
 
விளக்கெண்ணெய்
விளக்கெண்ணெய்யை தினமும் இரவில் படுக்கும் முன் புருவங்களின் மீது தடவி வர, புருவங்களில் உள்ள முடி நன்கு அடர்த்தியாக வளரும். இச்செயலை தொடர்ந்து 1 மாதம் பின்பற்றி வந்தாலே, நல்ல மாற்றத்தைக் காண முடியும். உடலும் குளிர்ச்சி பெரும்.
 
பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஏ, பி மற்றும் ஈ ஏராளமாக உள்ளது. இது முடிக்கு நல்ல ஊட்டத்தை வழங்கி, முடியின் வளர்ச்சியைத் தூண்டும். அதற்கு  தினமும் இரவில் படுக்கும் முன் பாதாம் எண்ணெயை புருங்களில் தடவி மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.
 
கற்றாழை
கற்றாழையின் ஜெல்லை இரவு படுக்கும் முன் புருவங்களில் தடவி, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வருவதால்,புருவங்கள் அடர்த்தியாக வளர்வதைக் காணலாம்.
 
முட்டையின் மஞ்சள் கரு
முட்டையை உடைத்து அதன் மஞ்சள் கருவை எடுத்து அதை புருவங்களின் மீது தடவி 15- 20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி 2 வாரத்திற்கு தினமும் செய்து வந்தால், உங்கள் புருவங்கள் நன்கு வளர்ந்திருப்பதைப் பார்க்க முடியும்.
 
வெந்தயம்
வெந்தயத்தை நீரில் ஊற வைத்து, பேஸ்ட் செய்து, புருவங்களின் மீது தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வர, புருவங்கள் நன்கு அடர்த்தியாக இருப்பதைக் காணலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோல் இறுக்கமடைந்து சுருக்கங்களை தடுக்கும் கற்றாழை ஐஸ் கட்டி மசாஜ் செய்து பாருங்க...