இயற்கையான முறையில் கருமையான அக்குளை வெள்ளையாக்கிடலாம்
இயற்கையான முறையில் கருமையான அக்குளை வெள்ளையாக்கிடலாம்
ஆண், பெண் இருவருமே தங்களை அழகாக காட்டிக் கொள்வதில் மிகவும் கவனம் செலுத்துவதோடு, அதிக பணத்தை செலவழித்து வருகிறோம். பெரும்பாலும் பெண்கள் பியூட்டி பார்லர் போவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இன்றைய பேஷன் உலகில் பெரும்பாலும் பெண்கள் ஸ்லீவ்லெஸ் ஆடைகளைத் தான் அதிகமாக விரும்புகின்றனர். ஆனால் அக்குள் கருமையாக இருப்பவர்களால் இத்தகைய ஆடைகளை அணிய முடிவதில்லை. இதனால் பலர் அக்குள்களை வெள்ளையாக்க அதிகம் பணம் செலவழிக்கின்றனர்.
இயற்கையான முறையில் பக்க விளைவுகள் ஏதுமின்றி கருமையான அக்குளை வெள்ளையாக்கிடும் மருத்துவ குறிப்பை பர்றி தெரிந்து கொள்வோம். இவற்றை பயன்படுத்தி கருமையான அக்குளில் இருந்து விடுபடுங்கள்.
அதிமதுரவேர்
அதிமதுர வேரை தண்ணீரில் ஊறவைத்து அரைத்து அதனை அக்குளின் கருமையாக உள்ள இடங்களில் தடவி உலர வைக்க வேண்டும் இந்த முறையை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் அக்குள் கருமை மறைவதோடு, அக்குளில் துர்நாற்றம் வீசாமலும் இருக்கும்.
எலுமிச்சை
எலுமி்சையில் ப்ளீச்சிங் தன்மை இருப்பதால் எலுமிச்சையைக் கொண்டு தினமும் அக்குளில் தேய்த்து ஊறவைத்து கழுவினால், அக்குளில் உள்ள இறந்த செல்கள் நீங்கி அக்குள் வெள்ளையாவதோடு அக்குள் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம்.
கற்றாழை
கற்றாலையின் ஜெல்லை அக்குளில் தடவி மசாஜ் செய்து சுமார் ஒரு மணிநேரம் ஊறவைக்க வேண்டும். இப்படி இரண்டு நாட்களுக்கு ஒருமுறை செய்து வந்தால் நிச்சயம் அக்குள் கருமை நீங்கும்.
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயை அரைத்து அரை கப் சாறு எடுத்து அதில் சிறிது உருளைக்கிழங்கை அரைத்து கலந்து அக்குளில் தடவி சிறிதுநேரம் ஸ்கரப் செய்து 10-15 நிமிடம் ஊறவைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவவேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் நல்ல முன்னேற்றம் தெரியும்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை அரைத்து அதனை தினமும் காலையில் அக்குளில் தடவி ஸ்கரப் செய்து பின் குளித்தால் கருமையான அக்குளில் இருந்து விடுபடலாம்.