Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சைனஸ் பிரச்சனையை தடுக்க உதவும் இயற்கை குறிப்புகள் !!

Webdunia
பொதுவாக, குளிர்காலங்களில் பாக்டீரியாத் தொற்று அதிகமாக இருக்கும். காலை நடைப்பயிற்சி செல்லும்போது முகத்தில் மஃப்ளர் கட்டிக்கொண்டு செல்வது நல்லது.

சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் முடிந்தவரை ஏசியைத் தவிர்ப்பது நல்லது. அப்படியே பயன்படுத்த வேண்டிய கட்டாயம் வந்தால், அதனை வாரத்துக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும். அப்போதுதான்  தூசு படியாமல் இருக்கும்.
 
புகைபிடிக்கும் பழக்கத்தை அடியோடு விட்டுவிட வேண்டும். மியூக்கோஸ் படலத்தை சிகரெட் புகை எளிதில் பாதிக்கும். அரிப்பு, எரிச்சல் மற்றும் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
 
நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு எளிதில் சைனஸ் தொற்று பரவும். முறையான உடற்பயிற்சி, அதிக காய்கறி மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம் சைனஸ் பிரச்னையைத் தடுக்கலாம்.
 
தூசு உள்ளே புகாமல் இருக்க மியூக்கோஸ் பகுதி எப்போதும் மெலிதான ஈரத் தன்மையுடன் இருக்கும். சைனஸ் பாதிக்கப்பட்டபின் வீங்கிய நிலையில் இருக்கும் மியூக்கோஸ் பகுதி வறண்டு காணப்படும். மேலும், வலி அதிகமாகும். இதனைத் தவிர்க்க வெந்நீர் ஆவியை சுவாசிக்கலாம். இதன்முலம் வீக்கம் குறையும், வறண்ட பகுதியில் ஈரப்பதம் அதிகரிக்கும்.
 
ஆன்டிபயாட்டிக்ஸ், பாக்டீரியல் தொற்றை மட்டுமே தடுக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். வைரல் தொற்றை ஆன்டிபயாட்டிக்ஸ் மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியாது.  எனவே, சைனஸ் பிரச்னைக்கு மருத்துவரிடம் ஆலோசனை பெறாமல் அவற்றை எடுத்துக்கொள்ளக் கூடாது.
 
தொடர் சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் கிரானைட் தயாரிக்கும் தொழிற்சாலை போன்ற, காற்றில் துகள்கள் பரவும் இடங்களுக்கு அடிக்கடி செல்வதைத் தவிர்க்க வேண்டும். போகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், சைனஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கென்று பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ள மாஸ்க்கை அணிந்து செல்லவேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments