Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பல் கூச்சம் ஏற்படுவதை தடுத்து நிவாரணம் அளிக்கும் வீட்டு வைத்தியங்கள் !!

பல் கூச்சம் ஏற்படுவதை தடுத்து நிவாரணம் அளிக்கும் வீட்டு வைத்தியங்கள் !!
பற்களில் சொத்தை ஏற்பட்டால், பல் உடைந்து ஈறு தெரியும்படி இருந்தால், ஈறு தொடர்பான நோய்களினால், பற்கள் சிதைந்து போனால் அல்லது எனாமல் போனால், பல் கூச்சம் ஏற்படுகிறது. தவறான பற்பசை உபயோகித்தாலும், அதிக ரசாயனம் கலந்த பற்பசைகள் உபயோகித்தாலும் , வயதானாலும் இவைகள் ஏற்படும்.

தேங்காய் எண்ணெயில் ஆயில் புல்லிங் : காலையில் பல் விளக்குவதற்குமுன் 1 டேபிள் ஸ்பூன் அளவுள்ள தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றிக் கொள்ளவும். 20 நிமிடங்களுக்கு ஈறுகளின் மூலை முடுக்குகளிலெல்லாம் செல்லும் படி, கொப்பளிக்க வேண்டும். உடனே துப்பி விடக்கூடாது. 20 நிமிடங்கள் கழித்து துப்ப வேண்டும். 
 
உப்பு நீர் : உப்பு நீரில் கொப்பளிப்பது மிக மிக நல்லதாகும். அவை பற்களில் அமில-காரத்தன்மையை சமன் படுத்தும். பேக்டீரியாக்களை உப்பு அழிக்கும். ஈறுகளை பலப்படுத்தும்.ர த்தக் கசிவிற்கு உப்பு நீரில் கொப்பளித்தால் நல்ல பலங்களைத் தரும்.
 
கிராம்பு எண்ணெய்: கிராம்பு சிறந்த வலி நிவாரணி. வலியை மரத்துப் போகச் செய்யும். பேக்டீரியாக்களை அழிக்கிறது. கிராம்பை பொடித்து அதனுடல் ஆலிவ் எண்ணெயைக் கலந்து பேஸ்ட் போல் செய்து, பாதிக்கப்பட்ட இடங்களில் போடலாம். அரை மணி நேரம் கழித்து வாயை வெதுவெதுப்பான நீரில் கொப்பளிக்கவும்.
 
கொய்யா இலை : பல்வலிக்கு கொய்யா இலையை ஆயுர்வேத மருத்துவத்தில் பரிசீலிக்கப்படுகிறது. அதேபோல் 2012 ஆம் ஆண்டு இன்டெர்நேஷனல் ஜர்னல் ஆஃப் ஃபார்மா மற்றும் பயோசயின்ஸ் வெளியிட்ட ஆய்வின்படி, கொய்யா இலை வலி நிவாரணியாக செயல்படுகிறது. 
 
பூண்டு : பூண்டு பல் கூச்சத்தினை போக்குகிறது. அதிலுள்ள அல்லைசின் எற பொருள் கிருமி நாசினியாக செயல் படுகிறது. பல்வலிக்கு நிவாரணம் தருகிறது. 2 பல் பூண்டுடன் சிறிது உப்பு மற்றும் நீர் கலந்து மைய அரைத்துக் கொள்ளுங்கள்.அதனை பாதிக்கப்பட்ட பற்களின் மேல் போட வேண்டும். சில நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். 
 
ஓம எண்ணெய் பற்களில் உள்ள பேக்டீரியாக்களை எதிர்க்கும் திறன் கொண்டுள்ளது. வீக்கத்தினையும் கட்டுபடுத்தும். 2-3 துளி ஓம எண்ணெய்யை பாதிக்கப்பட்ட பற்களின் மீதும் ஈறின் மீதும் தேய்க்கவும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காளானில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும் !!