Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இயற்கை முறையிலான எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்....!

Advertiesment
இயற்கை முறையிலான எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்....!
வாய்ப்புண் வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் இருக்கலாம். இதற்கு தினமும் காலையிலும், மாலையிலும் தேங்காய் பாலில் சிறிது தேன் லந்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆறிவிடும்.
செம்பருத்தி இலைகளை உரலில் போட்டு அரைத்து எடுத்துத் தலிக்குத் தேய்த்துக் கொள்ளவும். சற்று ஊறவிட்டுக் குளிக்கவும்.  இப்படி  அடிக்கடி செய்து வந்தால், தலைமுடி பட்டுப்போல் மிருதுவாகிக் கருகருவென்றிருக்கும்.
 
ஐந்தாறு துளசி இலைகளும், ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்க சேர்த்து அரைத்து நெற்றியில் பற்றாக போட்டால் தலைவலி பறந்து  போய்விடும்.
 
ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் தினமும் தூதுவளைச் செடியின் பூவைப் பறித்துப் பாலில் போட்டுக் காய்ச்சிக் குடித்தால்,  நோயின் தொந்தரவு  குறையும்.
 
உடல் பருமனை குறைக்க இரவு ஒரு டீஸ்பூன் ஓமத்தை ஊரவைத்து, ஒரு டீஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து வந்தால் உடல் பருமன்  குறைய ஆரம்பிக்கும்.
 
பொடித்த படிகாரத்தை கொண்டு வாரம் மூன்றுமுறை பல் தேய்த்து வந்தால் பற்களின் கறை, இரத்தம் வடிதல், வாய் துர்நாற்றம் நீங்குவதோடு  பல் ஈறுக்கு நன்கு வலு கொடுக்கும்.
 
வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி பனங்கற்கண்டு சேர்த்து வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி  நீங்கும்.

webdunia

 
சீயக்காய் அரைக்கும்போது வேப்பிலையையும் கடுக்காயையும் போட்டு அரைத்து தலைகுளிக்க உபயோகித்தால் பேன் தொல்லை இருக்காது.
 
வெங்காயத்தை நன்கு ஊறவைத்து அரைத்து தலை முடியின் வேர்க்கால்களில் தடவி வைத்திருந்து நன்கு ஊறியபின் தலைமுடியை  அலசினால் முடி நன்கு வளர்வதுடன், கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
 
தலைமுடி பளபளப்புடன் இருக்க முட்டையின் வெள்ளைக் கருவில் ஒரு முழு எலுமிச்சம்பழ ஜூஸை மட்டும் பிழிந்து தலைக்குத் தடவி பத்து நிமிடம் ஊறியபின் ரெகுலராக உபயோகிக்கும் ஷாம்பு போட்டு குளித்தால், நம் தலைமுடி பளபளப்பாக மாறும்.
 
உருளைக்கிழங்கு பொறியல் செய்யும் போது சீரகத்துடன் கொஞ்சம் ஓமத்தையும் சேர்த்து சமைத்தால் வீடே மணக்கும். எளிதில் செரிக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெண்டைக்காய் ஊறவைத்த நீரை பருகுவதால் ஏற்படும் நன்மைகள்...!