Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நோயை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் இயற்கை மருத்துவ குறிப்புகள்...!!

நோயை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் இயற்கை மருத்துவ குறிப்புகள்...!!
முடக்கத்தான் கீரையை சமைத்து சாப்பிட்டால், கீல் பிடிப்பு, கீல் வாதம், கால்களை நீண்ட, மடக்க முடியாமல் இருப்பது, நடக்க முடியாமல் இருப்பது போன்றவை குணமாகும்.
தினமும் முருங்கைக் கீரையைச் சாப்பிட்டால் நீரழிவு நோய் கட்டுப்படும். கண் பார்வை தெளிவு பெறும்.
 
அதிக இருமல் ஏற்படும்போது ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டால் இருமல் குறையும்.
 
சாதாரண வாய்வுப் பிடிப்பிற்கு சுக்கையும், பனை வெல்லத்தையும் கலந்து சாப்பிட்டால் போதும்.
 
வாய்வுத் தொல்லையுடையவர்கள் முடக்கத்தான் கீரையை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
 
மணத்தக்காளிக் கீரையை பருப்புடன் சேர்த்து துனமும் சாப்பிட்டு வந்தால் ஆசனக்கடுப்பு மூல நோய் குணமாகும்.
 
வேப்பம்பூவை ரசம் வைத்துச் சாப்பிட்டால் உடம்பில் உள்ள கிருமிகள் அழியும். பித்தம் குறையும்.
 
தினசரி ஒரு வெங்காயத்தை பச்சையாக உண்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். இருமல், சளி நீங்கும்.
 
கேரட்டில் கரோட்டின் என்கின்ற உயரிய சத்துக்கள் உள்ளது. இவை நமது உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகப்படுத்துகிறது.
 
சுண்டைக்காயில் இரும்புச்சத்து அத்கமாக உள்ளது. இந்தக் காய் ஆஸ்துமா, காய்ச்சல் முதலியவற்றை நீக்கும்.
 
கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு முறை கேழ்வரகில் செய்த உணவுப்பொருளை சாப்பிட வேண்டும். இதில் இரும்புச்சத்து, கால்சியம்  உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகிஷாசுரனை போரிட்டு வாகை சூடிய நாளே விஜயதசமி!!