Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பலவிதமான நோய்களுக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவ குறிப்புகள் !!

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (15:20 IST)
கருவேலம் மரத்தின் கொழுந்தை கசக்கினால் வரும் சாறை வெந்நீரில் கலந்து  சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் பிரச்சனை சரியாகும்.

வயிற்றில் தொப்பை உள்ளவர்கள் சுரைக்காயை வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட்டால் தொப்பை குறையும். தூக்கமின்மை பிரச்சினை உடையவர்கள் வேப்ப இலை சாறுடன் எலுமிச்சை பழச்சாற்றை சேர்த்து சாப்பிட்டால் தூக்கமின்மை நீங்கி ஆழ்ந்த தூக்கம் உண்டாகும்.
 
கமலா ஆரஞ்சு பழத்தின் தோலை வெயிலில் நன்றாக காய வைத்து, அதனை பொடியாக்கி தினந்தோறும் சோப் பயன்படுத்துவதற்கு பதிலாக இதனை பயன்படுத்தி வந்தால் பல விதமான சரும பிரச்சனைகளும் குணமாகும். 
 
பாலில் பேரிச்சம் பழத்தை இரவு நேரத்தில் ஊறவைத்து, காலை எழுந்தவுடன் அதனை எடுத்து சாப்பிடுவருவதனால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாது.
 
கால் அவுன்ஸ் அளவிலான அருகம்புல் சாறு தினமும் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இவ்விதமான நோயும் நம்மை நெருங்காது.
 
சீயக்காயுடன் இடித்த ரோஜா இலைகளை  சேர்த்து உங்களது தலையில் தேய்த்து குளிப்பதனால் உஷ்ணம் தணிந்து உடல் குளிர்ச்சியாகும். இரும்புச்சத்து அதிகமுள்ள நாவல் பழத்தை கிடைக்கும் காலத்தில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்களது உடல் பலம் பெறும்.
 
கற்கண்டு மற்றும் துளசி சாற்றினை சாப்பிட்டால் வாந்தி பிரச்சனை சரியாகும். தலைமுடி ஆரோக்கியமானதாகவும், அடர்த்தியானதாகவும் இருக்க, தேங்காய் எண்ணெய்யில் அரைத்த கருவேப்பிலையை  சேர்த்து தலையில் தேய்க்கவும்.
 
தலையில் பேன் தொல்லை அதிகம் உள்ளவர்கள், மலைவேம்பு இலையை அரைத்து தலையில் தேய்த்துவந்தால் பேன் தொல்லையிலிருந்து விடுபடலாம். கருப்பட்டியோடு வெள்ளைப்பூண்டு சேர்த்து சாப்பிட்டு வருவதனால் இடுப்பு வலி குணமாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

மனநலத்தை பாதிக்கிறதா ‘Work From Home’? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

இதய பிரச்சனை இருப்பவர்கள் வேகமாக நடைப்பயிற்சி செய்யலாமா?

பட்டாசு வெடிக்கும்போது விபத்து ஏற்பட்டால் உடனே செய்ய வேண்டியது என்ன?

நீரிழிவு நோயாளிகளுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments