Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயற்கை மருத்துவத்தில் பயன்தரும் மருதாணி!!

Webdunia
மருதாணி இலையை தயிர் சேர்த்து அரைத்து இரவு படுப்பதற்கு முன் காலில் உள்ள பித்த வெடிப்புகளில் தடவிகொண்டு வந்தால் விரைவில்  பித்த வெடிப்பு குணமாகும்.
மருதாணி பூக்களைப் பறித்து தலையணையின் கீழ் வைத்து படுத்தால் நன்றாக தீக்கம் வரும். மருதாணிச் செடியின் பட்டைகளை ஊறவைத்த தண்ணீரில் தேன் கலந்து காலை, மாலை என இருவேளையும் குடித்துவந்தால் கல்லீரல் மற்றும் மண்ணீரல் நோய்கள் குணமாகும்.
 
மருதாணி இலை, அவுரி இலை இரண்டையும் தேங்காய் எண்ணெய்யில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி தலையில் தேய்த்துவந்தால் முடி  கறுப்பாக மாறும்.
6 தேக்கரண்டி அளவு புதிதாக சேகரித்த மருதாணி இலைச் சாற்றை வெறும் வயிற்றில் காலை வேளைகளில் குடிக்க வேண்டும். 10 நாள்கள்  வரை இவ்வாறு செய்ய பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை படுதல் குணமாக்கும்.
 
மருதாணி இலைச் சாறு, வெங்காயச் சாறு இரண்டையும் ஒன்றாகக் கலந்து தேமல், படை மீது இரவில் தடவி காலையில் குளித்து வந்தால்  விரைவில் குணம் பெறலாம்.
 
மருதாணி இலைச் சாறு, நல்லெண்ணெய், பசும்பால், மூன்றையும் ஒன்றாகக் கலந்து காய்ச்சி தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் இளநரை  நீங்கும். மருதாணி இலையை அரைத்து பசையாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் பூச கொப்புளங்கள் தீக்காயங்கள் குணமாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூத்த குடிமக்களுக்கு பின்ஹோல் பியூப்பிலோபிளாஸ்டி மூலம் சிகிச்சை! - டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை!

`அல்சைமர்' எனும் மறதிநோய்.. இந்த நோயை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

வாய்வு வெளியேறும் போது சத்தம் வருவது ஏன்?

வெயில் காலத்திற்கேற்ற நன்னாரி சர்பத்.. சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா?

கேனில் அடைக்கப்பட்ட பானங்கள் குடித்தால் புற்றுநோய் வருமா? அதிர்ச்சி தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments