Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விந்தணு குறைபாடு போக்கும் மருத்துவ குணங்களை கொண்ட நறுந்தாளி !!

Narunthali
, செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (10:24 IST)
தாளிக்கீரை என்பது வேலிகள், சிறு காடுகள் ஆகிய பகுதிகளில் காணப்படும் கொடியின் இனம். இந்த கீரை அனைத்து இடங்களிலும் தானாக வளர்ந்து, யாரும் பயன்படுத்தாமல் வீணாகும் மூலிகை வகைகளில் இதும் ஒன்று.


ஆண்மையை அதிகரிக்க இந்த 5 வகையான கீரை வகைகள் பயன்படுகிறது. நறுந்தாளி, நன்முருங்கை, தூதுவளை, பசலை, வாளிளறு கீரை நெய்வார்த்துண்ணில் யாழி என விஞ்சுவார் போகத்தில் பெண்களெல்லாம் பின்வாங்கி கேள். இதில், நறுந்தாளி என்பது தாளிகீரையை குறிக்கும்.

அடுத்துள்ள தூதுவளை, பசலைக்கீரை, அரைக்கீரை ஆகிய 5 வகையான கீரைகளை பசு நெய் ஊற்றி சமைத்து உண்டு வர யாழி என்ற விலங்கின் பலம் உடலுக்கு கிடைக்கும் என்று சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

webdunia

தாளிக்கீரையின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணங்களை கொண்டது. இதன் இலை அதிகமான மருத்துவ குணங்களை கொண்டது. இலையை பருப்புடன் சேர்த்து கடைந்து குழம்பாகவோ, கூட்டாகவோ சமைத்து உண்ணலாம்.

இதில், இலை மட்டும் அதிக மருத்துவ குணம் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உள் உறுப்புகளில் ஏற்படும் புண், அழற்சி, வாய்ப்புண், சிறுநீர்ப் பாதையில் தோன்றும் நோய்கள், விந்தணு குறைபாடு போன்றவை இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விடும்.

தாளிக்கீரையின் இலையை அரைத்து வைத்துக்கொண்டு அதனை தினமும் தலை முதல் கால்வரை தேய்த்து குளித்து வரை சருமம் பளபளப்பு அடையும். உடல் அரிப்பு ஏற்படாது. தோல் நோய்கள் நீங்கும். குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நாளில் 4,417 பேர் பாதிப்பு; 23 பேர் பலி! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!