Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு அற்புத தீர்வு தரும் புதினா தண்ணீர் !!

Advertiesment
வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு அற்புத தீர்வு தரும் புதினா தண்ணீர் !!
, செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (13:16 IST)
புதினா தண்ணீர் ஜலதோஷத்தை குணப்படுத்தும் தன்மை கொண்டது. புதினா தண்ணீரில் இருக்கக்கூடிய மெந்தோல் சுவாசப்பாதையை சரி செய்து ஜலதோஷம் ஏற்படும் நேரத்தில் ஏற்படக்கூடிய மூக்கடைப்பை சரி செய்கிறது.


புதினா இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து சூடு ஆறிய பிறகு அப்படியே குடிக்கலாம். புத்துணர்ச்சியூட்டும் சுவை மற்றும் தனித்துவமான குளிர்ச்சியான உணர்வு காரணமாக புதினா தேநீர், மதுபானங்கள், இனிப்பு வகைகள், இன்னும் பல உணவுப் பண்டங்களில் மூலப் பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாவை குறைக்க புதினா தண்ணீர் உதவுகிறது. புதினா தண்ணீர் குடித்து வரும்போது அது பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தி நாள்முழுவதும் சுவாசத்தை புத்துணர்ச்சி ஊட்டுகிறது.

புதினா நீர் செரிமானத்தை சீராக்குகிறது. புதினா தண்ணீரில் மெந்தோல் காணப்படுகிறது. இது எரிச்சலை ஏற்படுத்தும் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை குணமாக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் அஜீரண பிரச்சனைகளையும் போக்குகிறது.

கால் கப் புதினா நீரில் 12 கலோரிகள், 8 மில்லி கிராம் சோடியம் காணப்படுகிறது. இதில் புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், ஃபைபர், சர்க்கரை சத்து எதுவுமே இல்லை. மேலும் ஆக்ஸிஜனேற்றிகள், இரும்புச்சத்து, மாங்கனீஸ் சத்து, போலேட் சத்துக்களும் காணப்படுகிறது.

புதினா தண்ணீரில் வைட்டமின் கே காணப்படுகிறது. இது கண்புரை, வயிற்றுப்போக்கு, மார்பக புற்றுநோய், டயரியா போன்ற நோய்களின் அபாயத்தை குறைக்கும் தன்மை கொண்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்டார் பழத்தில் நிறைந்துள்ள சத்துக்கள் என்ன தெரியுமா...?