Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்றுவலியை குறைக்கும் இயற்கை மருத்துவம்....

Webdunia
முருங்கை ஈர்க்கு 2 கைப்பிடி அளவு எடுத்துத் தண்ணீர்விட்டுக் காய்ச்சி வடிகட்டி, அதனுடன் வெங்காயம், சீரகம், மிளகு, நெய் கூட்டித் தேவையான உப்பும் சேர்த்து, சூப் செய்து பருகிவரலாம், வயிற்றுவலி குறையும்.


 
 
முள்ளு முருங்கை இலையையும் கல்யாண முருங்கை இலையையும் மிக்சியில் போட்டு லேசாகத் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 தேக்கரண்டி சாப்பிட, வயிற்றுவலி குறையும்.
 
முருங்கைக் கீரையுடன் சிறிது கறுப்பு எள் சேர்த்துக் கஷாயமாக்கி ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டால், வலி குறையும்.
 
உலர்ந்த புதினா இலையுடன் ஒரு ஸ்பூன் கறுப்பு எள் சேர்த்துக் கஷாயமாகச் செய்து சாப்பிட்டால், வலி குணமாகும்.
 
கொத்தமல்லி சாறில் கருஞ்சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் வலி குறையும்.
 
மாதவிலக்கு வந்த மூன்றாம் நாள் காலை மலைவேம்பு சாறு 1/2 கப் குடிக்கவும்.
 
சாதிக்காய், திப்பிலி, சீரகம் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்துப் பொடித்து, 1/4 ஸ்பூன் மோரில் கலந்து சாப்பிடப் பலன் கிடைக்கும்.
 
ஓமம், கிராம்பு இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடித்து, 1/4 ஸ்பூன் மோரில் கலந்து சாப்பிடப் பலன் கிடைக்கும்.
 
எள் விதையை அரைத்துக் கொட்டைப் பாக்கு அளவு எடுத்து நீரில் கலந்து சாப்பிடவும்.
 
ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாறுடன், சிறிது பெருங்காயம் சேர்த்து மோரில் கலந்து சாப்பிட, வலி குறையும்.
 
சேர்க்க வேண்டியவை: 
 
வாழைப் பழம், அன்னாசிப் பழம், பப்பாளிப் பழம், பசலைக் கீரை, ஓட்ஸ், கோதுமை, கொட்டை வகைகள்.
 
தவிர்க்க வேண்டியவை:
 
மாமிசம், பால், பாலாடைக்கட்டி, பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், எண்ணெய் ஆகியவையாகும்.

வேர்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

விஷேச குணங்கள் கொண்ட அபயன் கடுக்காய்! தமிழர் மருத்துவத்தில் மறந்துப்போன மூலிகை!

பலவகை சத்துக்களை கொண்ட சாமை அல்வா..! ஈஸியா செய்யலாம்?

வெந்தய பொடியை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

உடலுக்கு நன்மை தரும் சுவையான ராகி பாயாசம் செய்வது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments