Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முசுமுசுக்கை கீரையின் மருத்துவ பயன்கள் !!

Webdunia
முசுமுசுக்கை கீரை கொடி வகையைச் சேர்ந்த ஒரு கீரையாகும். முசுமுசுக்கையானது கொம்புபுடலை, பேய்புடலை, மொசுமொசுக்கை, மாமுலி, ஆயிலேயம் எனவும் அழைக்கபடுகிறது.


இலையும், தண்டுகளும் சற்று சொர சொரப்பாக இருக்கும். தண்டுகளை சுற்றி சுனைகள் காணப்படும். இது செடி, மரம், சுவர்களில் பற்றி வளரும் இயல்புடையது. முசுமுசுக்கை கீரையானது துவர்ப்பு, மற்றும் கார்ப்புச் சுவையுடனும், வெப்பத் தன்மையும் கொண்டது. முசுமுசுக்கை கீரையின் இலை மற்றும் வேர் மருத்துவ குணம் கொண்டவை.
 
முசுமுசுக்கை கீரையில் நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய பல சத்துக்கள் நிறைந்து உள்ளது. இது நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடியது மட்டுமல்லாமல், உடலில் ஏற்படும் பல நோய்களை குணப்படுத்தக் கூடியது. 
 
முசுமுசுக்கை கீரையில் புரோட்டின், நார்சத்து, இரும்பு சத்து, கால்சியம் மற்றும் விட்டமின் ‘C’ ஆகியவை நிறைந்து காணப்படுகிறது.
 
முசுமுசுக்கை கீரையை உணவில் சேர்த்து கொண்டால் சளி, கோழை, தும்மல், குறட்டை ஆகிய பிரச்சினைகள் சரியாகும். முசுமுசுக்கையானது மூச்சுக் குழாயில் ஏற்படும் நோய் தொற்றுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
 
முசுமுசுக்கை கீரையானது நோயால் பாதிக்கப்பட்ட உடலை வலுபெறச் செய்யும். காய்ச்சலால் பாதிக்கபட்டவர்களின் நாவானது சுவையை இழந்திருக்கும். அப்படிப்பட்டவர்கள் முசுமுசுக்கை கீரையை உண்டால் நாவில் ஏற்பட்ட சுவையின்மை நீங்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரைக்கு மாற்றாக வெல்லத்தை பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள்?

நீரிழிவு நோயாளிகளுக்கு நள்ளிரவில் பசி எடுத்தால் என்ன செய்ய வேண்டும்? பயனுள்ள டிப்ஸ்..!

நன்னாரி: உடலைக் காக்கும் அற்புத மூலிகை - அதன் மருத்துவப் பயன்கள்!

ஜூஸ் Vs. ஸ்மூத்தி: எது சிறந்தது? - ஆரோக்கிய நன்மைகள் ஒரு முழுமையான பார்வை!

காடை இறைச்சி: சுவையும் சத்தும் நிறைந்த ஆரோக்கிய உணவு!

அடுத்த கட்டுரையில்
Show comments