Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொடுகுத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு தரும் மருத்துவ குறிப்புக்கள் !!

Advertiesment
பொடுகுத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு தரும் மருத்துவ குறிப்புக்கள் !!
கற்றாழை மிகவும் அற்புதமான மூலிகைப் பொருள். இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இது உடல் ஆரோக்கியம் முதல் சருமம், தலைமுடி போன்றவற்றின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த வல்லது. 

தலைமுடி அதிகம் உதிரும் பிரச்சனை உள்ளவர்கள், கற்றாழை ஜெல்லைக் கொண்டு தலைமுடியைப் பராமரித்தால், தலைமுடி உதிர்வது நின்றுவிடும்.
 
தேவையான பொருட்கள்: கற்றாழை 1 பெரிய இலை, கறிவேப்பிலை சிறிது, சின்ன வெங்காயம் 2 (நறுக்கியது), மிளகு 1/2 டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் 1/4 கப்.
 
செய்முறை: முதலில் கற்றாழை இலையின் முனைகளில் உள்ள கூர்மையை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின் மிக்ஸியில் கற்றாழைத் துண்டுகளையும், கறிவேப்பிலையையும் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
 
அடுத்து அதனை வடிகட்டியில் ஊற்றி கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை நன்கு சூடேற்றிக் கொண்டு, அதில் வடிகட்டி வைத்துள்ள கற்றாழை சாற்றினை ஊற்றி நன்கு பாதியாகும் வரை கொதிக்க விட வேண்டும்.
 
பிறகு அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கிளறி நன்கு கொதிக்க விட வேண்டும். கலவை நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் வெங்காயம் மற்றும் மிளகு சேர்த்து 1 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், எண்ணெய் தயார்.
 
இந்த எண்ணெய்யை தினமும் தலைக்கு தடவி வந்தால், தலை முடி உதிர்வது, பொடுகுத் தொல்லை போன்றவை குறைந்து, முடி நன்கு வளர்வதைக் காணலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மருத்துவ குணங்களை கொண்டுள்ள வெள்ளை வெங்காயம் !!